மணச்சநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணவரிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

0

மணச்சநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணவரிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது

மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி இவரது கணவர் முருகன் இந்த நிலையில் நேற்று காலை மண்ணச்சநல்லூர் அருகே தத்தமங்கலத்தில் முருகன்
நடைபயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் முருகனின் கையில் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

- Advertisement -

இது குறித்து முருகன் சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போனை பறித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்த நிலையில் மணச்சநல்லூர் வெங்கங்குடி பகுதி அர்ஜுன தெருவை சேர்ந்த மதிவாணன் என்பவரது மகன் ரோகித் வயது (19), அதே பகுதியை மூர்த்தி என்பவரது மகன் கோகுல் வயது(21) நேற்று கைது செய்தனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணவரிடம் செல்போன் பறித்த சம்பவம் மண்ணச்சநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்