திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 கல்வி மாவட்டங்களில் 01.03.2024 ஆம் தேதி இன்று முதல் மேல்நிலை பொதுத்தேர்வு தொடங்கப்பட்டது. இத்தேர்வு திருச்சி கல்வி மாவட்டத்தில் 70 தேர்வு மையங்களும், இலால்குடி கல்வி மாவட்டத்தில் 60 தேர்வு மையங்களும், இவற்றுள் சிறைச்சாலை தேர்வு மையம் 1 ஆக மொத்தம் 130 தேர்வு மையங்களிலும் 13,603 மாணவர்களும் 16,400 மாணவிகளும் மொத்தம் 30,003 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
04.03.2024 முதல் மேல்நிலை முதலாமாண்டு தேர்வுகள் தொடங்கப்படவுள்ளது. இதில் 15,211 மாணவர்களும், 17,102 மாணவிகளும் ஆக மொத்தம் 32,313 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்.
திருச்சி மாவட்டத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 276 சொல்வதை எழுதுபவரும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு 185 சொல்வதை எழுதுபவர்கள், 250 பறக்கும் படை உறுப்பினர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர் 1600 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி வருவாய் மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்கு மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கு மொத்தம் 9 தேர்வு மையங்களும் மேல்நிலை முதலாமாண்டிற்கு 7 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு தனித்தேர்வர்கள் தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மத்திய சிறையிலேயே சிறைக்கைதிகளுக்கு தனித்தேர்வு மையம் அமைக்கப்பட்டு மேல்நிலை முதலாம் ஆண்டில் 35 சிறை தேர்வர்களும், மேல்நிலை
இரண்டாமாண்டில் 9 சிறை தேர்வர்களும் ஆக மொத்தம் 44 சிறை தேர்வர்கள் தேர்வு
எழுதுகிறார்கள்.
மேல்நிலை தேர்விற்கு திருச்சி கல்வி மாவட்டத்தில் 2 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும், இலால்குடி கல்வி மாவட்டத்தில் 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களும் ஆக மொத்தம் 5 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து 34 வழித்தட அலுவலர்கள் ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் சென்றடைய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கட்டுக்காப்பு மையங்களில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது.