மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில், திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் மாபெரும் இரத்ததான முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.
மாணவரணி மாவட்ட செயலாளர் பொறியாளர் இப்ராம்ஷா தலைமையில் நடைபெற்ற இம்முகாமை அதிமுக மாநில மாணவரணி செயலாளர், முன்னாள் எம்பி, எஸ்.ஆர் விஜயகுமார் துவக்கி வைத்தார்.





இந்த முகாமில் இரத்த அழுத்தம் கண்டறிதல், எடை கண்டறிதல், ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல், இருதய சுருள் படம் அறிதல் உள்ளிட்ட பரிசோதனைகளும், எலும்பு மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட ஆலோசனைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி குமார், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் துணை மேயர் சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் எம்.பி ரத்தினவேல், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திக்கேயன், இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, பொன்னர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.




