திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் புதியதாக கட்டப்பட்டுள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், ஏழிசைமன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் மணி மண்டபங்களை இன்று (27.02.2024) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

திருச்சியில் நடைபெற்ற விழாநிகழ்வில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், எம்.பழனியாண்டி, சீ.கதிரவன், மாவட்ட ஊராட்சி தலைவர் த.ராஜேந்திரன், துணை மேயர் ஜி.திவ்யா, மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




