- Advertisement -

கேட் (KAT) தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியை சேர்ந்த 122 மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா!

0

- Advertisement -

திருச்சி சென்னை பைபாஸ் சாலை செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியின் மூலம் கேட் (KAT), தேர்வில் பங்கேற்று பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் மேக்ஸ் ஆகிய தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் சார்பில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது.

Vagai
Bismi

முன்னதாக தனியார் ஒலிம்பியாட் நிறுவனம் சார்பில் அகில இந்திய அளவில் இரண்டு கட்டமாக நடைபெறும் கேட் (KAT) தேர்வில் திருச்சி ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியை சேர்ந்த 127 மாணவ மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 122 மாணவ மாணவிகள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 32 ஆயிரம் ரொக்கப் பணமும், பதக்கம் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி அவர்களை கௌரவிக்கும் விதமாக ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் இன்று நடந்த விழாவிற்கு பள்ளி முதல்வர் சோபியா தலைமை வகித்தார். பள்ளி மேலாளர் சந்திரசேகர் வரவேற்புரை வழங்கினார். விழாவில் தந்தை பெரியார் ஈவேரா கல்லூரி பேராசிரியர் செந்தில் குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கேட் (KAT) தேர்வில் பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்ற 122 மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்