- Advertisement -

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தக்கோரி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் – அகில இந்திய கட்டுனர் சங்கம் அறிவிப்பு!

0

- Advertisement -

அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் மாநில அளவிலான கூட்டம் திருச்சி மொரைஸ் சிட்டியில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் திரிசங்கு, திருச்சி மைய சேர்மன் சுப்பிரமணி, மாநில செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் ஆனந்தன், ஒருங்கிணைப்பாளர் சித்தார்த்தன், செயலாளர் சிவக்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், திருச்சி செயலாளர் நசுருதீன், பொருளாளர் ஜெயராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bismi

கூட்டத்திற்கிடையே தலைவர்கள்
ஐயப்பன் மற்றும் திரிசங்கு ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்….

Vagai

ஜல்லி, எம்சாண்ட், கிரஷர் டஸ்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கட்டுமானங்கள் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அரசின் கனவு திட்டங்கள் பல முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கட்டுமான பொருட்களின் விலை ஏற்றதால் கடுமையான விளைவுகளை சந்தித்து வருகிறோம். எனவே வரும் காலங்களில் டெண்டர்களை தவிர்ப்பதற்கு முடிவெடுத்துள்ளோம்.
தமிழகத்தில் ஏறத்தாழ 2000 கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது.
ஏற்கனவே 50 சதவீத கல்குவாரிகள் மூடப்பட்டு விட்டதால் ஜல்லி, எம் சாண்ட் தட்டுப்பாடு ஏற்பட்டு மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது.
எனவே கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த உடனடியாக ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய ஒரு நாள் போராட்டமும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம் என்று தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்