- Advertisement -

திருச்சியில் அரசு பள்ளியில் திமுக கட்சி நிகழ்ச்சி – மாணவர்கள் அவதி!

0

- Advertisement -

2024 பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் அறிவித்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தால் அரசின் திட்டங்கள் மற்றும் கட்சி சார்ந்த எந்த ஒரு நலத்திட்டங்கள் வழங்கக்கூடாது என்பது தேர்தல் ஆணையத்தின் விதி.

இந்நிலையில் திருச்சியில் கடந்த சில நாட்களாக தி.மு.க.தலைவர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு வார்டு மற்றும் பகுதி வாரியாக திமுக சார்பில்‌ பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருச்சி ஒத்தக்கடை, தில்லை நகர், வண்ணாரப்பேட்டை , மிளகுபாறை, பொன்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மக்கள் சுமார் 6000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் ‌வழங்கப்பட்டது.

இதில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான அருண் நேரு கலந்து கொண்டு வேஷ்டி, சட்டை, புடவை, துண்டு, காலை உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திமுகவினர், சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் பிரம்மாண்ட கட்வுட், பேனர்களை வைத்து இருந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெரிய மிளகு பாறை பகுதியில் பிரதான சாலையை ஒட்டியே கொடிக்கம்பங்களை நட்டு வைத்திருந்தனர்.

Vagai

கருமண்டபம் பொன்னகர் ‌பகுதியில் உள்ள மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. வகுப்புகள் நடந்த போதிலும், அரசியல்வாதிகள் திரண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்தினர். பள்ளிக்கு வந்த சிறார்கள், அரசியல்வாதிகளின் சொகுசு கார்களையும், நலத்திட்ட உதவிகள் பெற வந்திருந்த மக்கள் கூட்டத்தையும் மிரட்சியுடன் கடந்து சென்றனர்.

Bismi

பள்ளி வளாகத்தில் நிகழ்ச்சி நடந்ததால், வகுப்புகளுக்கு செல்ல சிறுவர் சிறுமியர் மிகவும் சிரமப்பட்டனர். பள்ளி வளாக மைதானத்தில் ஒலிப்பெருக்கி மூலம் திமுக கட்சி பாடல் ஒலிப்பரப்பப்பட்டது. இதனால் சிறுவர், சிறுமிகள் வகுப்பறையில் பாடம் கவனிப்பதில் மிகவும் சிரமம் ஏற்ப்பட்டது. தமிழக அரசியல் கட்சிகள், கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை அரசு பள்ளி வளாகத்தில் எப்படி நடத்தலாம். அது போன்ற நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் பலரின் கோரிக்கையாக உள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்