- Advertisement -

அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா தலைமையில், மொழிப்போர் தியாகிகள் அஞ்சலி நிகழ்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!

0

- Advertisement -

இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை காப்பதற்காகவும் கடந்த 1965 ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். தமிழ் மொழிக்காக தீக்குளித்து இறந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் திருச்சி, தென்னூர், அண்ணா நகர் பகுதியில் உள்ளன. இந்த நினைவிடங்களில் மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தன்று அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

Bismi

Vagai

இந்நிலையில் வரும் 25 ஆம் தேதி அதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சி தென்னூர் அண்ணா நகர் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது தொடர்பாகவும், திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் இருந்து அமைதி ஊர்வலம் நடத்துவது தொடர்பாகவும், திருச்சி மாநகர் மாவட்ட கழகத்தில் பொதுக் கூட்டம் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் அதிமுக பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், ரோஜர், முஸ்தபா, வட்டக் கழக செயலாளர்கள், மாணவரணியினர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்