- Advertisement -

மூன்றாவது முறையாக வென்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார் – பாரிவேந்தர் எம்.பி திருச்சியில் பேட்டி

0

- Advertisement -

இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில்  நடைபெற்றது. பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நிறுவனத் தலைவருமான டாக்டர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் டாக்டர் ரவிபச்சமுத்து முன்னிலை வகித்தார். மேலும் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயசீலன் மற்றும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தற்கால அரசியல் சூழ்நிலைகள், வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பான கட்சியின் நிலைபாடு போன்ற முக்கிய கருத்துக்கள் ஆலோசிக்கபட்டன.

Bismi

பின்னர் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் எம்.பி செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்…

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மீண்டும் மோடி பிரதமர் ஆவார். பாஜக கூட்டணியில் ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளை ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளனர். இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் திருச்சியில் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. மாநாடு தேதி பின்னர் அறிவிக்கப்படும். மாநாட்டில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்