- Advertisement -

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மாலை அணிவித்து மரியாதை!

0

- Advertisement -

மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாடு முழுவதும் அதிமுகவினர் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் சோமரசம்பேட்டை பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு, வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிமுக மணிகண்டம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் தாடி ராசு, மாநில இளைஞரணி இணைச் செயலாளர் பொன் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் சேவியர், மண்டல துணைச் செயலாளர் திருநாவுக்கரசு, சார்பு அணி செயலாளர் கண்ணதாசன், புல்லட் ஜான், சோனா விவேக், கோப்பு நட்ராஜ், சமயபுரம் சோமு உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

Vagai
Bismi

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்