திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்!
சிங்கப்பூரில் இருந்து நூதன முறையில் கடத்தி வரபட்ட ₹.33.72 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய் உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் நான்கு பயணிகள் டிரில்லிங் மிஷின், சமையல் உபகரணங்கள், சாவி ஆகியவற்றில் மறைத்து 546 கிராம் எடை கொண்ட ₹.33.72 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் நான்கு பயணிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.