- Advertisement -

திருச்சியில் த.வெ.க. சார்பில் மறைந்த நிர்வாகிகளுக்கு 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி: 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கி நலத்திட்ட உதவி!

Bismi

திருச்சியில் த.வெ.க. சார்பில் மறைந்த நிர்வாகிகளுக்கு 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி: 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கி நலத்திட்ட உதவி!

​திருச்சி:

தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி காந்திமார்க்கெட் மற்றும் பாலக்கரை பகுதி சார்பில், மறைந்த நிர்வாகிகள் வி.எல். ஸ்ரீனிவாசன் மற்றும் உறந்தை கலை ஆகியோரின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

Vagai

- Advertisement -

​இதையொட்டி திருச்சி காந்தி மார்க்கெட் நுழைவு வாயில் பகுதியில் சிறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் நவல்பட்டு விஜி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த நிர்வாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். திருச்சி கிழக்கு தொகுதிப் பொறுப்பாளர் தர்கா சவுகத் முன்னிலை வகித்தார்.

​தொடர்ந்து, நிகழ்வின் ஒரு பகுதியாக அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

​இந்நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் செந்தில்நாதன், ஆர்.கே. ராஜா, மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் பா. அருண்குமார், பகுதி செயலாளர்கள் சூர்யா, கௌதமன் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் வட்டச் செயலாளர்கள் ராஜேஷ், அஜய் அருண், ஜெய்சங்கர், கோபி, பிரதாப், ஆலன், செபாஸ்டியன், அஜித் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

​#TVK #TamilagaVettriKazhagam #TrichyNews #Vijay #TVKTrichy #GandhiMarket #Palakkarai #Annadhanam #TVKCadres #TamilNaduNews

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்