மருது சகோதரர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது, நினைவு நாளில் தவெக தலைவர் விஜய் வீரவணக்கம்!

மருது சகோதரர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது, நினைவு நாளில் தவெக தலைவர் விஜய் வீரவணக்கம்!
சென்னை:
தாய்நாட்டின் விடுதலைக்காகத் தம் இன்னுயிரைத் தியாகம் செய்த சிவகங்கைச் சீமையின் மன்னர்களான மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் தனது வீரவணக்கத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
”தாய்நாட்டின் விடுதலைக்காக தம் இன்னுயிரைத் தியாகம் செய்த, சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவு நாளில், அவர்தம் ஒப்பற்ற வீரத்தையும், அளப்பரிய தியாகத்தையும் போற்றி எனது வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு முன்னதாகவே, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து, அனைவரையும் விடுதலைப் பாதையில் ஒன்றிணைக்கும் வகையில், ‘ஜம்புத் தீவு பிரகடனத்தை’ முழங்கிப் போராடிய மருது சகோதரர்களின் அர்ப்பணிப்பு போற்றுதலுக்குரியது.
விடுதலை உணர்வைத் தமிழ் மண்ணில் விதைத்த மருது சகோதரர்களின் வீரவரலாறு தலைமுறைகளைக் கடந்தும் நிலைத்திருக்கட்டும்!”
இவ்வாறு தனது அறிக்கையில் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
#மருதுசகோதரர்கள் #MaruthuPandiyar #MaruthuBrothers #வீரவணக்கம் #Vijay #TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் #ஜம்புத்தீவுபிரகடனம் #சிவகங்கை #விடுதலைப்போராட்டம்





Comments are closed.