புதுக்கோட்டை மேலூர் நடுநிலைப் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா உற்சாகக் கொண்டாட்டம்!
புதுக்கோட்டை மேலூர் நடுநிலைப் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா உற்சாகக் கொண்டாட்டம்!
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


இவ்விழாவிற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியை மாலா அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து தலைவர் சண்முகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியதுடன், மாணவ-மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான முக்கிய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கிப் பேசினார்.
இந்நிகழ்வில் அனைத்து உலக பொங்குதமிழ் மாநிலத் துணைத் தலைவரும் ‘புதுகை வரலாறு’ செய்தியாளருமான சிங்காரம், பள்ளி ஆசிரியர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.
விழாவின் நிறைவாக உதவித் தலைமை ஆசிரியர் ஹெர்மன் நன்றி கூறினார்.
#IndependenceDay #Pudukkottai #MelurSchool #Thirumayam #SchoolNews #IndependenceDayCelebration #TamilNaduNews





Comments are closed.