- Advertisement -

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி திருச்சியில் SDPI கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

- Advertisement -

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி திருச்சியில் SDPI கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

​திருச்சி:

Vagai

இந்திய ஜனநாயகத்தின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் செயல்பட்டு வரும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் மற்றும் அரசியல் அழுத்தங்களுக்காக தன்னிச்சையாக கொண்டு வரப்பட்ட S.I.R முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

​திருச்சியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPI திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் K.தமீம் அன்சாரி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் Er.முகமது சித்திக் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட துணைத் தலைவர் தளபதி அப்பாஸ் நிகழ்வை நெறிப்படுத்தி தொகுத்து வழங்கினார்.

 

​இப்போராட்டத்தில் வர்த்தகர் அணி மாநில பொதுச் செயலாளர் கே.முபாரக் அலி, மாவட்ட துணைத் தலைவர் Y.ரஹீம், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் M.அப்சல் கான், TCEH மாவட்ட செயலாளர் Er.சதாம் உசேன், மாவட்ட பொருளாளர் பிச்சைக்கனி, மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் A.S.அப்துல் காதர் (பாபு), மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் மஜீத் மற்றும் Young Democrats மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

Bismi

​

ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற SDPI கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இமாம் R.ஹஸ்ஸான் பைஜி, ஜனநாயக மாண்புகளைக் காக்க தவறிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்து ஆவேச கண்டன உரையாற்றினார். மேலும், மக்கள் கலை இலக்கியக் கழக (மகஇக) மாநில பொதுச் செயலாளர் தோழர் கோவன் கலந்துகொண்டு மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைக் கண்டித்துப் பேசினார்.

​தொடர்ந்து, மேற்கு தொகுதி செயலாளர் KSA.ரியாஸ், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் மார்க்கெட் ஷேக் மற்றும் திருவெறும்பூர் தொகுதி தலைவர் I.ஷேக் முகமது ஆகியோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

 

​

இந்நிகழ்வில் கிழக்கு தொகுதி தலைவர் I.சபியுல்லா, செயலாளர் சுகைப், திருவெறும்பூர் தொகுதி தலைவர் Er.I.ஷேக் முகமது, துணைத் தலைவர் கைருதீன், மேற்கு தொகுதி தலைவர் சையது முஸ்தபா, பொருளாளர் ஷாஜகான், மணப்பாறை தொகுதி தலைவர் உமர், செயலாளர் ராஜா முகமது, மகளிர் அணி மாவட்ட தலைவர் தாஜ் நிஷா, பொதுச் செயலாளர் தவுலத் நிஷா, SDTU மாவட்ட தலைவர் சக்கரை மீரான், இணைச் செயலாளர் இலியாஸ், வர்த்தகர் அணி மாவட்ட செயலாளர் அப்துல் மாலிக், சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் ஹக்கீம், Young Democrats மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பைசல், துணை ஒருங்கிணைப்பாளர்கள் முகமது அலி, தமீம் அன்சாரி, வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் மசூதா மரியம் உள்ளிட்ட தொகுதி, கிளை மற்றும் அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

​நிகழ்வின் நிறைவாக கிழக்கு தொகுதி துணைத் தலைவர் இம்தியாஸ் நன்றியுரை ஆற்றினார்.

 

​#SDPI #TrichyProtest #ElectionCommission #GyaneshKumar #ResignECI #DemocracyInDanger #TNElectionNews #TrichySouthSDPI #PeoplesProtest

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்