- Advertisement -

திருமயம் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராத அவலம். நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும் மக்கள் போராட்டம்! – சமூக சேவை இயக்கம் எச்சரிக்கை

- Advertisement -

திருமயம் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராத அவலம். நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும் மக்கள் போராட்டம்! – சமூக சேவை இயக்கம் எச்சரிக்கை

 

​திருமயம் | புதுக்கோட்டை:

 

Vagai

திருமயம் பேருந்து நிலையத்திற்குள் உரிய முறையில் பேருந்துகள் வந்து செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 22-ஆம் தேதி மாபெரும் மக்கள் குவிப்பு போராட்டம் நடத்தப்படும் என மக்கள் சமூக சேவை இயக்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

​புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மக்கள் சமூக சேவை இயக்கம் சார்பில் சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

​தலைமை: வர்த்தக சங்கத் தலைவர் எஸ்.பி. கருப்பையா

​முன்னிலை: மக்கள் சமூக சேவை இயக்கத் தலைவர் சிக்கந்தர்

​வரவேற்புரை: வீரமணி

​பொதுமக்கள் & பயணிகளின் குற்றச்சாட்டுகள்

Bismi

​இக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முன்வைத்த முக்கியப் புகார்கள்,

​காரைக்குடி, மதுரை மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகள் திருமயம் பேருந்து நிலையத்திற்குள் வராமல், பைபாஸ் சாலையிலேயே சென்றுவிடுகின்றன.

குறிப்பாக இரவு 9:00 மணி முதல் அதிகாலை 5:30 மணி வரை எந்தப் பேருந்தும் உள்ளே வருவதில்லை. இதனால் பெண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

 

​அதிகாரிகளின் மெத்தனப் போக்கு: முன்னதாக திருமயம் ஏ.கே.பி திருமண மண்டபத்தில் நடைபெற்ற ‘மனுநீதி முகாமில்’, அனைத்துப் பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் சென்று வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூட்டத்தில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

 

​”பொதுமக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில், வரும் 22-ஆம் தேதி நடைபெறும் அடுத்த கூட்டத்தில் ‘மாபெரும் மக்கள் திரள் போராட்டம்’ குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும்.”

 

​இந்நிகழ்வில் ஜீவானந்தம், ‘நைஸ் மளிகை’ உரிமையாளர் சபி, சந்தைப்பேட்டை குணச்சித்திரன், சீமானூர் பெருமாள், ரமணி, மணிகண்டன் உட்படப் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் நன்றி கூறினார்.

 

#Pudukkottai #Thirumayam #BusStandIssue #ThirumayamNews #TNSTC #TNTransport #PublicProtest #DistrictCollector #TamilNaduNews #BreakingNewsTamil

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்