திருச்சியில் ‘லயன்ஸ் கிளப் ஆஃப் விஷன்’ புதிய சங்கம் உதயம்: நிர்வாகிகள் கோலாகல பதவியேற்பு!
திருச்சியில் ‘லயன்ஸ் கிளப் ஆஃப் விஷன்’ புதிய சங்கம் உதயம்: நிர்வாகிகள் கோலாகல பதவியேற்பு!
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்டம் 3242F மற்றும் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் முன்னெடுப்பில், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ராயல் லயன்ஸ் சங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி லயன்ஸ் கிளப் ஆஃப் விஷன் புதிய சங்கம் துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருச்சியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்டத் தலைவர் பிரசன்ன வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத் தலைவர் லயன் ஜே. சில்வியா நெப்போலியன் தலைமை வகித்தார். மாவட்ட ஆளுநர் லயன் விஜயலட்சுமி சண்முகவேல் புதிய சங்கத்தை முறைப்படி துவக்கி வைத்து, சமூகச் சேவைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வாழ்த்து தெரிவித்தார். உறுப்பினர் வளர்ச்சி குழுத் தலைவர் லயன் ரவி புதிய உறுப்பினர்களைச் சங்கத்தில் இணைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில் விரிவாக்க சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமரன், மாவட்ட அமைச்சரவை செயலாளர் சசிதரன், மாவட்ட பொருளாளர் எழிலரசி ரவி, மாவட்ட நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட நிதி அலுவலர் சௌந்தரபாண்டியன், மாவட்ட நிர்வாக அதிகாரி நடராஜன், சங்க வழிநடத்துதல் செயலாளர் சரவணபெருமாள், இலக்கு உந்துனர் சரவணகுமார், ஆளுநர் செயலர் சிவராமகிருஷ்ணன், மாவட்ட நிதி ஆலோசகர் ஜோசப், மண்டலத் தலைவர் முகமது சபி, லீடு டோனார் வையாபுரி, வட்டாரத் தலைவர் சரவணன், மாவட்ட அவை இணைச் செயலாளர் பொன்னுவேல் மற்றும் மாவட்ட இணைப் பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய சங்கத்தின் வளர்ச்சிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
புதிய சங்கத்தின் பொறுப்பாளர்கள்:

தலைவர்: ஹேமலதா
செயலாளர்: விஜயகுமார்
பொருளாளர்: முகமது ஹயாஸ்
துணைத் தலைவர்கள்: முனைவர் சங்கர், கணேசன், இயற்கை மருத்துவர் கௌதமன், ஹரி பிரசாத், மகேஸ்வரி, கிருஷ்ணகாந்த், உஷா கேசவன் மற்றும் சந்தானம்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் தங்களது பொறுப்புகளை முறைப்படி ஏற்றுக்கொண்டனர்.
#Trichy #LionsClub #LionsClubOfVision #TrichyNews #LionsDistrict3242F #LionsClubInternational #SocialService #TrichyEvents





Comments are closed.