- Advertisement -

திருச்சி எம்.பி துரை வைகோ மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையருடன் முக்கிய ஆலோசனை: விமான நிலைய விரிவாக்கம், உலர் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு!

- Advertisement -

திருச்சி எம்.பி துரை வைகோ மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையருடன் முக்கிய ஆலோசனை: விமான நிலைய விரிவாக்கம், உலர் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு!

​திருச்சி:

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. துரை வைகோ அவர்கள், திருச்சியின் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து, தொகுதியின் முக்கிய உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

Vagai

​நேற்று (17.06.2026) மாலை 4 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அண்மையில் பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பிரதீக் தயாள், இ.ஆ.ப., மற்றும் மாநகராட்சி ஆணையர் திரு. வீர் பிரதாப் சிங், இ.ஆ.ப. ஆகிய இருவரிடமும் நிலுவையில் உள்ள திட்டங்கள் மற்றும் புதிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அவர் தனித்தனியே சமர்ப்பித்தார்.

​மாவட்ட ஆட்சியரிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கைகள்:

​விமான நிலைய ஓடுதள விரிவாக்கம்: திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்திற்குத் தேவையான 7.67 ஏக்கர் நிலத்திற்கான வழிகாட்டி மதிப்பு (GLV) திருத்தம் குறித்து நிதி அமைச்சகத்திடம் இருந்து விரைந்து அறிக்கை பெற்றுத் தர கோரப்பட்டது. இதற்கு ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

​உலர் துறைமுகம் (Dry Port): திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்யுமாறு முதலமைச்சரிடம் கோரியதைச் சுட்டிக்காட்டி, அதற்கு மாவட்ட நிர்வாகத்தின் ஆதரவை துரை வைகோ கோரினார்.

​துவாக்குடி – பால்பண்ணை அணுகுசாலை: நிலமெடுப்பு பணிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு, 9 கிராமங்களில் 2 கிராமங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 7 கிராமங்களுக்கு விரைந்து இழப்பீடு வழங்கி, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சாலைப் பணிகள் தொடங்கப்படும் என்றும் ஆட்சியர் விளக்கமளித்தார்.

​இதர கோரிக்கைகள்: ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் முதல் பட்டர்ஃப்ளை பூங்கா வரையிலான கொள்ளிடம் வெள்ளக் கரைச் சாலையை சீரமைத்தல், பால்பண்ணை சந்திப்பு போக்குவரத்து நெரிசல், பாகலூர் பட்டியலின குடும்பங்களுக்கான பொதுப்பாதை, வயலூர் சாலை ஜெயம் நகர் குடிநீர் & பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட பல்வேறு புதிய மற்றும் நிலுவையில் உள்ள கோரிக்கைகளுக்குத் தேதிவாரியாக மனுக்கள் அளிக்கப்பட்டன.

Bismi

​மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தப்பட்டவை:

​MPLADS நிதிப் பணிகள் ஆய்வு: நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் (MPLADS) கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் நிறைவடைந்ததும், அதனை எம்.பி அலுவலகத்திற்கு உடனே தெரிவித்து, பணிகளின் தரத்தை நேரில் ஆய்வு செய்ய உரிய ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என ஆணையரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

​மன்னார்புரம் பயணியர் நிழற்குடை: திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலை மன்னார்புரம் சர்வீஸ் சாலையில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியை விரைவுபடுத்தக் கோரி கடிதம் வழங்கப்பட்டது.

​ஸ்வச் பாரத் சர்வேஷன்: ‘ஸ்வச் பாரத்’ தூய்மைக்கான தரவரிசையில் திருச்சி மாநகரம் மீண்டும் முதலிடம் பிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தப்பட்டது.

​இதர கோரிக்கைகள்: கரூர் தேசிய நெடுஞ்சாலை புதை வடிகால் இணைப்பு, திருவெறும்பூர் பேருந்து நிலைய உள்கட்டமைப்பு மற்றும் அணுகுசாலை விரிவாக்கம், மாரிஸ் சாலை மேம்பாலப் பணிகள், விமான நிலைய வளாக சுவரை ஒட்டிய மின்விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு நிலுவை திட்டங்கள் குறித்து நினைவூட்டல் கடிதம் வழங்கப்பட்டது.

​அதிகாரிகளுடன் இணைந்து செயல்படத் தயார்: துரை வைகோ உறுதி

​இச்சந்திப்பு குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. துரை வைகோ,

​”மக்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றுவதிலும், எதிர்கால நல்வாழ்வுக்கான திட்டங்களை வகுப்பதிலும், மக்கள் பிரதிநிதியும், அதிகாரிகளும் இணைந்து செயல்படும் போது அந்தப் பகுதி நிச்சயம் உயர்ந்து வளரும். மக்கள் நலன் ஒன்றே எமது ஒரே பிரதான நோக்கம். அந்த எண்ணத்துடன் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட நான் முழு மனதுடன் தயாராக இருக்கிறேன்,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

​#Trichy #DuraiVaiko #TrichyMP #TrichyCollector #TrichyCorporation #TrichyDevelopment #TrichyAirportExpansion #MDMK #PublicWelfare #TamilNaduNews

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்