- Advertisement -

பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரிக்கை: பழைய பால் பண்ணை நிலத்தை ஒதுக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்!

- Advertisement -

பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமானப் பணிகளை நிறுத்தக் கோரிக்கை: பழைய பால் பண்ணை நிலத்தை ஒதுக்க வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்!

​திருச்சி:

பஞ்சப்பூரில் நடைபெற்று வரும் புதிய மார்க்கெட் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்திவிட்டு, காய்கறி மொத்த வியாபாரத்திற்குப் பழைய பால் பண்ணை அரசு நிலத்தை ஒதுக்க வேண்டும் என்று திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத் தலைவர் எம்.கே. கமலக்கண்ணன் தமிழக முதலமைச்சருக்குக் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

Vagai

​கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

​பாரம்பரியமிக்க காந்தி மார்க்கெட்: சுமார் 100 ஆண்டு காலப் பாரம்பரியம் கொண்ட காந்தி மார்க்கெட் 6.5 ஏக்கர் பரப்பளவில், 3000 தரைக்கடைகள் மற்றும் செட் அமைத்த கடைகளுடன் இயங்கி வருகிறது. இதனைச் சுற்றி பழமண்டி, வெங்காய மண்டி, வாழைக்காய் மண்டி, மளிகை மண்டிகள் என சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் வியாபாரம் நடைபெறுகிறது.

Bismi

​கடந்த காலத் திட்டங்களின் தோல்வி: அதிமுக ஆட்சிக் காலத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி, மணிகண்டம் கள்ளக்குடி பகுதியில் ரூ.76 கோடி செலவில் உருவாக்கப்பட்ட வணிக வளாகம் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், நகருக்கு வெளியே 22 கி.மீ தொலைவில் அமைந்ததாலும் வணிக ரீதியாகப் பெரும் தோல்வியைச் சந்தித்தது. அங்குள்ள 465 கடைகளில் வெறும் திறப்பு விழா மட்டுமே நடத்தப்பட்டு, இன்றுவரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

​பஞ்சப்பூர் திட்டத்திற்கு எதிர்ப்பு: தற்போதைய நிலையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அதே பகுதியில் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எதிரே 21 ஏக்கரில் ரூ.256 கோடி செலவில் வியாபாரிகளிடம் எந்த ஒரு ஆலோசனையும் செய்யாமல் புதிய மார்க்கெட் கட்டுமானப் பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்காக 3,000 மரங்கள் அழிக்கப்பட்டதால், இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது.

​வாழ்வாதாரப் பாதிப்பு: கட்டுமானப் பணிகளை முடித்துவிட்டுப் பின்னாளில் தங்களை இடமாற்றம் செய்யும்போது, வழக்கு சம்பந்தமான சிக்கல்கள் எழுந்தால் காந்தி மார்க்கெட்டைச் சேர்ந்த பத்தாயிரம் குடும்பங்களும் நடுத்தெருவில் நிற்கும் அவல நிலை ஏற்படும்.

​வியாபாரிகளின் மாற்று யோசனை:

​வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில், திருச்சி மாநகரின் மையப்பகுதிக்கு அருகில் கடந்த பல ஆண்டுகளாகப் பயன்பாடு இல்லாமல் இருக்கும் பழைய பால் பண்ணை அரசு நிலத்தை காய்கறி மொத்த வியாபாரத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பின்னர் அந்தப் பழைய பால் பண்ணை இடத்தினை முழுமையான வணிக வளாகமாக மாற்ற அரசு ஆவன செய்ய வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

​#Trichy #GandhiMarket #TrichyNews #TamilNaduGovernment #CMO_TamilNadu #PanchapurMarket #SaveTradersLivelihood #TrichyTraders #MarketRelocation #TamilNews

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்