- Advertisement -

​விஜய்யின் ‘பிளாக் அண்ட் ஒயிட்’ கோட்-சூட் ரகசியம் என்ன? மேடையில் உடைத்த முதல்வர்!

​"ஸ்டாலின் சாருக்கு நேரடி சவால்!" - திமுக-வை கிழித்துத் தொங்கவிட்ட முதல்வர் விஜய்! அதிரடி உரை விபரம்!

- Advertisement -

புதிய வரலாற்றை எழுதிய ‘சாமானிய மக்கள் ஆட்சி’: திமுக-வை நேரடியாகச் சாடி முதல்வர் விஜய் ஆவேச உரை!

 

​திருச்சி:

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்து, எதிர்கட்சியினரின் விமர்சனங்களுக்கு அதிரடியான பதிலடிகளைத் தந்துள்ளார்.

 

Vagai

​அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள அவரது உரையின் முக்கியத் தொகுப்பு பின்வருமாறு:

 

​1. திருச்சி கிழக்கு என் ‘செல்லப் பிள்ளை’!

 

​”தேர்தல் ஆணைய விதிப்படி நான் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தாலும், தமிழகத்தின் இதயம் போன்ற திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். வரும் இடைத்தேர்தலில் உங்கள் வீட்டில் இருக்கும், உங்களில் ஒருவரைத்தான் தவெக வேட்பாளராக நிறுத்தப்போகிறேன். எனக்கு பெரம்பூரும் திருச்சி கிழக்கும் இரு கண்கள் போன்றது” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

 

​2. ‘ஆறு நாள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை’ – ஸ்டாலின் சாருக்கு நேரடி கேள்வி!

 

​ஆட்சிக்கு வந்து சில வாரங்களே ஆன நிலையில், எதிர்கட்சியினர் திருமண வீடுகளில் கூட போய் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் எனச் சாடிய விஜய்,

 

​”இத்தனை வருஷமா மாத்தி மாத்தி உங்களை ஏமாத்திக்கிட்டு இருந்த ரெண்டு பேரையும் வேண்டாம்னு ஒதுக்கிட்டு, உங்களுக்காக உழைக்க வந்த உங்க விஜய ‘முதல் சேவகனா’ ஆக்கியிருக்கீங்க. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் அன்பாக உழைக்க வந்தவன் நான். 1977-ல் நீங்கள் போடாத ஓட்டை 2026-ல் எனக்குப் போட்டு ஆட்சியில் அமர வைத்துள்ளீர்கள். என் மீதான கிண்டல்களும் கேலிகளும் தான் என்னுடைய எனர்ஜி. தயவுசெய்து அதை நிறுத்தாதீர்கள்!” என்றார்.

 

 

​3. கோட்-சூட் அரசியல் & பிளாக் அண்ட் ஒயிட் ரகசியம்!

 

​தனது புதிய உடை மாற்றம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “அதிகாரம் செய்பவர்கள் மட்டும்தான் கோட்-சூட் போட வேண்டுமா? நான் என்ன கலர் கலராகவா போட்டு வருகிறேன்? நம் எல்லோர் மனசையும் போல ‘பிளாக் அண்ட் ஒயிட்’ ஆக எப்போதும் இந்த விஜய் இருப்பான் என்பதைக் காட்டவே இந்த உடை. இதில் இருக்கும் கருப்பு எதைக் குறிக்கிறது என்பது நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை” என சூசகமாகக் குறிப்பிட்டார்.

 

​4. இனி போட்டி தவெக VS திமுக மட்டும்தான்!

 

Bismi

​தமிழக அரசியலில் இனி இரண்டு பேருக்கு நடுவில்தான் போட்டி என்பதைத் திட்டவட்டமாகக் கூறிய முதல்வர் விஜய், “ஒன்று டிவிகே, இன்னொன்று டிஎம்கே. இதற்கு நடுவில் வேறு யாருக்கும் எந்த வேலையும் கிடையாது. இந்த விஜய்யின் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் சாரும், திமுக-வும் மற்றும் பலரும் சேர்ந்து கடைசி 5 நாட்களில் பல சூழ்ச்சிகளைச் செய்தார்கள். திமுக நம்மள தடுக்க தடுக்க, அவமானப்படுத்த படுத்த அத்தனையும் நமக்கு நன்மையாகவே முடியும்” என்றார்.

 

​5. தற்குறி என மக்களை இழிவுபடுத்தியவர்களுக்கு ஆப்பு!

 

​”நமது ஆட்சி அமைந்த பிறகு, இளைஞர்களும் பெண்களும் சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த கூட்டம் இப்போது நியூஸ் பார்க்கிறது. ஆனால், இப்போதும் நம் மக்களை ஒரு கூட்டம் ‘தற்குறி’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. காஞ்சிபுரத்தில் நான் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன்; மக்களைத் தற்குறி என்றவர்களின் அரசியல் வாழ்க்கையை அதே மக்கள்தான் இப்போது கேள்விக்குறியாக்கியுள்ளனர்” என ஆக்ரோஷமாகப் பேசினார்.

 

​6. சாதனைகளும் எதிர்காலத் திட்டங்களும்!

 

​கடந்த ஒரு மாத காலத்தில் தனது அரசு செய்துள்ள மக்கள் நலத்திட்டங்களை அவர் பட்டியலிட்டார்:

 

​200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம்: இதில் ஏற்கனவே இருந்த 100 யூனிட் திமுக கொடுத்தது அல்ல, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தந்தது.

 

​டாஸ்மாக் மூடல் & விவசாயக் கடன் தள்ளுபடி: மக்கள் நிம்மதிக்காக டாஸ்மாக்கை மூடி, விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய அதிகபட்சமாக உழைத்துள்ளோம். காலிப் பெருங்காய டப்பாவாக, நிதியை லாக் செய்துவிட்டுச் சென்ற நிலையிலும் நிர்வாகம் சீரமைக்கப்பட்டு வருகிறது.

 

​சிங்கப்பெண் காவல் படை: சட்டம் ஒழுங்கைச் சீர்க்குலைக்கும் போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒடுக்க திறமையான போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண்களின் பாதுகாப்புக்காக ‘சிங்கப்பெண் காவல் படை’ அடுத்த வாரம் முறைப்படி துவங்கப்படவுள்ளது.

 

​7. கொள்கையில் சமரசம் இல்லை!

 

​தவெக சிங்கிள் மெஜாரிட்டி பெற்று ஆட்சியில் இருந்தாலும், கூட்டணியில் நம்பி வந்தவர்களை அரவணைத்துச் செல்லும் என்றும், தவெக ஆட்சியில் மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமே கிடையாது என்றும் கூறினார். மேலும், மாநில உரிமைகள், நதிநீர் உரிமைகள், சமூக நீதி, சமத்துவ நீதி ஆகியவற்றை ஒரு நாளும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்தார்.

 

​”ஒரே நாளில் ஊழலற்ற ஆட்சியை உருவாக்குவது சாத்தியமில்லை, இது மேஜிக் அல்ல. ஆனால், ஒரு நாள் அதை நான் கண்டிப்பா நடத்திக் காட்டுவேன். என் கடன் என் மக்களுக்குப் பணி செய்து கிடப்பதே!” என்ற வரிகளுடன் முதல்வர் விஜய் தனது உரையை நிறைவு செய்தார்.

 

​#TVKAlliance #VijaySpeech #TrichyEast #CMVijay #TamilNaduPolitics2026 #SingappenPolice #DMKvsTVK #corruptionfreeTN

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்