திருச்சியில் அரசு பேருந்து – ஆம்புலன்ஸ் மோதல், பாலக்கரையில் பரபரப்பு!
திருச்சியில் அரசு பேருந்து – ஆம்புலன்ஸ் மோதல், பாலக்கரையில் பரபரப்பு!

திருச்சி | மே 14, 2026

திருச்சி பாலக்கரை பகுதியில் அரசு பேருந்தும், எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் இலவச ஆம்புலன்ஸ் வாகனமும் மோதிக்கொண்ட விபத்து அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவம் நடந்தது என்ன?
திருச்சி பாலக்கரை பகுதியில் அவசர மருத்துவ உதவிகளுக்காக SDPI கட்சியின் இலவச ஆம்புலன்ஸ் வாகனம் எப்போதும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருப்பது வழக்கம். இன்று மாலை சுமார் 5:30 மணி அளவில், அவசர அழைப்பு ஒன்றைப் பெற்று ஆம்புலன்ஸ் வாகனம் விரைந்து செல்ல எடுக்கும் பொழுது
பஞ்சப்பூரிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, பாலக்கரை மேம்பால இறக்கத்தில் வந்து கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் வாகனம் சென்ற போதிலும், பேருந்து ஓட்டுநர் அதைக் கவனிக்காமல் பேருந்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது.

விபத்தின் தாக்கம்
பாலத்தின் இறக்கத்தில் எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸின் முன்பகுதி, அரசுப் பேருந்தின் பின்பக்கத்தில் பலமாக மோதியது. இந்த விபத்தில்:
ஆம்புலன்ஸின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
போலீசார் விசாரணை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்தைச் சீர்செய்தனர். விபத்து குறித்து பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், விபத்துக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
#Trichy #Accident #Palakarai #Emergency #Ambulance #GovernmentBus #TrichyNews #SafetyFirst #BreakingNews #SDPI #TamilNaduPolice





Comments are closed.