- Advertisement -

வியட்நாமில் கொடூர விபத்து, சுற்றுலாப் படகு கவிழ்ந்து 15 இந்தியர்கள் உயிரிழப்பு!

- Advertisement -

வியட்நாமில் கொடூர விபத்து, சுற்றுலாப் படகு கவிழ்ந்து 15 இந்தியர்கள் உயிரிழப்பு!

 

​தெற்கு வியட்நாமில் தீவுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியபோது ஏற்பட்ட பயங்கர படகு விபத்தில், இந்திய சுற்றுலாப் பயணிகள் 15 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

 

​வியட்நாமின் மிகப்பெரிய தீவான பு குவோக் (Phu Quoc) அருகே உள்ள ‘ஹான் மே ரூட் ங்வோய்’ தீவில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

 

Vagai

​விபத்துக்குள்ளான படகில் 32 இந்திய சுற்றுலாப் பயணிகளும், 4 ஊழியர்களும் இருந்துள்ளனர்.

 

​கடலில் வீசிய பலத்த காற்று மற்றும் எழுந்த ராட்சத அலைகள் காரணமாகவே படகு கவிழ்ந்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

அப்பகுதியில் பெரிய அலைகள் இருந்ததாலும், பலர் படகுக்குள் சிக்கிக்கொண்டதாலும் மீட்புப் பணி சவாலாக இருந்தது” என வியட்நாமின் ‘விஎன் எக்ஸ்பிரஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடற்படை மற்றும் கடலோர காவல் படை வருவதற்கு முன்பே, அருகில் இருந்த பிற படகுகள் மூலமாகச் சில பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

​இந்த விபத்தை உறுதி செய்துள்ள வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம், மீட்புப் பணிகளைத் தீவிரமாக கண்காணித்து வருகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ பிரத்யேக கட்டுப்பாட்டு அறைகளை (Control Rooms) அமைத்துள்ளது.

 

Bismi

​உதவி மற்றும் தகவல்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:

 

​கட்டுப்பாட்டு அறை 1: +84 36 281 7930

 

​கட்டுப்பாட்டு அறை 2: +84 91 552 37 14

 

​கட்டுப்பாட்டு அறை 3: +84 33 452 0414

 

​ஹனோய் (Hanoi) கட்டுப்பாட்டு அறை: +84 91 308 9165

 

​பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக இந்திய தூதரகம் தனது ‘X’ (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளது.

 

​#VietnamBoatAccident #IndianTourists #PhuQuoc #Vietnam #RescueOperation #IndianEmbassy #TragedyAtSea #TrendingNews

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்