தமிழகத்தின் 18-வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்பு: கோட்டையில் கொடியேற்றியது தவெக!
தமிழகத்தின் 18-வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்பு: கோட்டையில் கொடியேற்றியது தவெக!
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று எழுதப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், தமிழகத்தின் 18-வது முதலமைச்சராக இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
அரங்கமே அதிர அரங்கேறிய பதவியேற்பு

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் விழா தொடங்கியது. ‘வந்தே மாதரம்’ பாடலுடன் தொடங்கிய விழாவில், தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் அர்லேகர், ஜோசப் விஜய்க்கு முதலமைச்சருக்கான பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
“சி. ஜோசப் விஜய் எனும் நான்…” என அவர் உறுதிமொழி ஏற்றபோது, அரங்கத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
9 பேர் கொண்ட அமைச்சரவை
முதலமைச்சர் விஜய்யுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணி பலத்துடன் அமைச்சரவை பதவியேற்றது. அதன் விவரம்:
புஸ்ஸி என். ஆனந்த்
ஆதவ் அர்ஜுனா
கே.ஜி. அருண்ராஜ்
கே.ஏ. செங்கோட்டையன்

வெங்கடரமணன்
நிர்மல்குமார்
ராஜ்மோகன்
டி.கே. பிரபு
கீர்த்தனா
திரண்டிருந்த முக்கியப் பிரமுகர்கள்
இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். மேலும், விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் – ஷோபா, நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
கூட்டணி ஆதரவுடன் மெஜாரிட்டி
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கின. இதையடுத்து, 120 எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி, முறைப்படி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்.
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
#TamilNaduPolitics #CMVijay #TVKSuccess #VijayOathCeremony #ThalapathyAsCM #TNGovt2026





Comments are closed.