செல்போன்களுக்கு வரும் ‘எச்சரிக்கை மெசேஜ்’ குறித்துப் பதற வேண்டாம்!
செல்போன்களுக்கு வரும் ‘எச்சரிக்கை மெசேஜ்’ குறித்துப் பதற வேண்டாம்!
மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA), இன்று நாடு முழுவதும் செல்போன் பயனாளர்களுக்கு அவசரகால எச்சரிக்கை செய்திகளை அனுப்பி சோதனை செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்ன நடக்கிறது?

இன்று உங்கள் மொபைல் போனுக்கு திடீரென ஒரு உரத்த சத்தத்துடன் (Loud Alert Sound) கூடிய மெசேஜ் வரக்கூடும். அதில் “ALERT…! DISASTER….” போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். இது ஒரு உண்மையான பேரிடர் கால எச்சரிக்கை அல்ல; மாறாக, மத்திய அரசு உருவாக்கும் ‘செல் பிராட்காஸ்ட் அலர்ட் சிஸ்டம்’ (Cell Broadcast Alert System) சரியாக வேலை செய்கிறதா என்பதைக் கண்டறியும் ஒரு மாதிரிச் சோதனை (Mock Drill) ஆகும்.
ஏன் இந்தச் சோதனை?

எதிர்காலத்தில் வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் போது, பொதுமக்களுக்கு மிகக் குறைந்த நேரத்தில் தகவலைத் தெரிவித்து அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
முக்கியக் குறிப்புகள்:
பயப்படத் தேவையில்லை: இந்த மெசேஜ் வரும்போது உங்கள் போன் அதிர்வுடனும், சத்தத்துடனும் செயல்படும். இது சிஸ்டத்தின் ஒரு பகுதிதான்.
யார் செய்கிறார்கள்: மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொள்கின்றன.
நடவடிக்கை: இந்த மெசேஜ் உங்களுக்கு வந்தால், அதைப் படித்துப் பார்த்துவிட்டு ‘OK’ கொடுக்கலாம். வேறு எந்த நடவடிக்கையும் தேவையில்லை.
குறுஞ்செய்தி (SMS) மூலம் வரும் லிங்குகளைத் தொடாதீர்கள்: இந்தச் சோதனை என்பது நேரடியாகத் திரையில் தோன்றும் ஒரு அறிவிப்பு மட்டுமே. மாறாக, யாராவது உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் லிங்க் அனுப்பி ‘க்ளிக் செய்யச் சொன்னால்’ அதைத் தவிர்க்கவும். அரசு அனுப்பும் இந்தச் சோதனை மெசேஜ்களில் எந்த லிங்கும் இருக்காது.





Comments are closed.