லால்குடி வேட்பாளர் டாக்டர் லீமாரோஸ் மார்டினை ஆதரித்து ஜி.கே.வாசன் தேர்தல் பிரச்சாரம்!
லால்குடி வேட்பாளர் டாக்டர் லீமாரோஸ் மார்டினை ஆதரித்து ஜி.கே.வாசன் தேர்தல் பிரச்சாரம்!
திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர்
டாக்டர் லீமாரோஸ் மார்டினை ஆதரித்து, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள் புள்ளம்பாடி பகுதியில் நேற்று 7/ 04/ 2026 பிரச்சாரம் மேற்கொண்டார்.


அப்போது லால்குடி தொகுதியில் 20 ஆண்டு காலம் திமுகவைச் சேர்ந்தவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும், இந்தப் பகுதி மிகவும் பின்தங்கி உள்ளது. மக்களுக்கு அடிப்படை தேவையான சாலை, குடிநீர் வசதிகள் செய்து தரப்படவில்லை. விவசாயிகள் மிகவும் அவல நிலையில் உள்ளனர். நெல்லை காயவைத்து பத்திரப்படுத்துவதற்கு குடோன் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர் . மக்களுக்கு போதுமான மருத்துவ வசதி இல்லை. பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணிற்கு சென்று உள்ளது. மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர்.
எனவே திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி மீண்டும் தமிழ்நாட்டில் எடப்பாடியார் தலைமையில் அம்மாவின் நல்லாட்சி அமைய வேட்பாளர் டாக்டர் லீமாரோஸ் மார்டினுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
லால்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பீமா ரோஸ் மார்ட்டின் அவர்களுக்காக பரப்பரை மேற்கொண்ட
ஜி. கே. வாசன் அவர்களுக்கு டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் நன்றி தெரிவித்தார்.





Comments are closed.