- Advertisement -

உலக தண்ணீர் தினம் – மாற்றம் அமைப்பின் சார்பில் மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

- Advertisement -

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு,
மாற்றம் அமைப்பின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நெகிழி பயன்படுத்துவதை தவிர்த்து, மக்கும் வகையிலான பைகளை பயன்படுத்தி, கடல் நீர் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கு மக்கும் வகையிலான பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் மிக முக்கியம். பூமி பந்து நிலபரப்பை விட அதிகம் கடல் நீரால் சூழ்ந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள கடல்நீரில் பல கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. நாகரிகம் மற்றும் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், கடல் பயணம் மற்றும் கடற்கரை பகுதிகளில் பொழுது போக்கு மற்றும் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளும் மனிதர்கள் கடற்கரை பகுதியில் நெகிழி பைகள், நெகிழி பாட்டில்கள் மற்றும் பல நெகிழி பொருட்களை பயன்படுத்தி, கடல் நீரிலும் கடற்கரையிலும் வீசி செல்கின்றனர்.

Vagai

அந்த நெகிழி பொருட்களால் கடல்நீர் மற்றும் கடற்கரை பகுதிகள் மாசடைவதுடன், கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றன. இதனை தவிர்க்கும் விதத்திலும் பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில்
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Bismi

இந்நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிறுவன தலைவரும், தேசிய மாநில விருதுகளை வென்ற நடிகரும், இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ், வழக்கறிஞர் கலைசெல்வன், வழக்கறிஞர் ஜான், பேராசிரியர் பிரிட்டோ, மாணவர்கள் லோகேஷ், கிருஷ்ணா, முகமது ஷபி, மணிகண்டன், அலெக்ஸ் பாண்டியன், நிகோலஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்