- Advertisement -

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு 98 CCTV கேமராக்கள், DNA சோதனை – சிக்கிய சீரியல் கில்லர்!

- Advertisement -

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு 98 CCTV கேமராக்கள், DNA சோதனை – சிக்கிய சீரியல் கில்லர்!


​தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

​நடந்தது என்ன?

Vagai

​கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
​துப்பு துலக்கிய தொழில்நுட்பம்
​இந்த வழக்கில் குற்றவாளியைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் பின்வரும் ஆதாரங்கள் முக்கியப் பங்காற்றின.

​CCTV கண்காணிப்பு:
விளாத்திகுளம் முதல் சாயல்குடி வரை உள்ள சுமார் 98 சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

Bismi

​தடயவியல் ஆதாரம்:
உயிரிழந்த மாணவியின் நகங்களுக்கு இடையில் இருந்த சதைப்பகுதியைச் சேகரித்த போலீசார், அதை டிஎன்ஏ (DNA) பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

​மோட்டார் சைக்கிள்:
சம்பவ இடத்திற்கு அருகே கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஒரு திருட்டு மோட்டார் சைக்கிளும் போலீசாருக்கு வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியது.
​கைது செய்யப்பட்ட கொடூரன்
​விசாரணையின் முடிவில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (எ) மாவீரன் (38) என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்:

​இவர் மீது ஏற்கனவே 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன.
​கடந்த 2020-ஆம் ஆண்டு மூதாட்டி ஒருவரைக் பாலியல் கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவன் .
​கடந்த டிசம்பர் 2025-இல் தான் ஜாமீனில் வெளியே வந்து இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளான் .
​அதிகாரிகள் மீது நடவடிக்கை
​இந்த வழக்கில் ஆரம்பத்தில் புகார் அளிக்க வந்த மாணவியின் பெற்றோரை அலைக்கழித்ததாகக் கூறி, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் குளத்தூர் உதவி ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது

​எச்சரிக்கை:
பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளம், புகைப்படம் அல்லது வீடியோக்களை எக்காரணம் கொண்டும் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்