- Advertisement -

வாகை தமிழ் தாய் டிரஸ்ட் சார்பில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மகளிர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களுடன் 200 ரூபாய் உதவி வழங்கப்பட்டது 

- Advertisement -

வாகை தமிழ் தாய் டிரஸ்ட் சார்பில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மகளிர்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்களுடன் 200 ரூபாய் உதவி வழங்கப்பட்டது

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் வாகை தமிழ் தாய் டிரஸ்ட் சார்பில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மகளிர்களுக்கு டிரஸ்ட் நிறுவனத் தலைவர் பிரபுராஜ் அவர்களின் தலைமையில், மெடிக்கல் அலுவலர் சாமுண்டீஸ்வரி அவர்கள் கலந்து கொண்டு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மகளிர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினார், வெங்கடேசன் அவர்கள் கவுன்சிலிங் வழங்கினார்.

​பலருக்கு எச்.ஐ.வி என்றாலே மரணம் என்ற பயம் இருக்கும். அதை மாற்ற ஆலோசகர்கள் கீழ்க்கண்டவற்றை விளக்கம் அளித்து எடுத்துரைத்தார்கள்,

Vagai

​எச்.ஐ.வி (HIV) என்பது ஒரு வைரஸ் தொற்று மட்டுமே சரியான சிகிச்சையெடுத்தால் அது எய்ட்ஸ் நிலைக்குச் செல்லாமல் தடுக்க முடியும்.

மருத்துவர்கள் கூறும் மாத்திரைகள் மூலம் ஒரு சாதாரண மனிதரைப் போலவே நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.

மனநல ஆதரவு (Emotional Support)

​தொற்று உறுதியானவுடன் ஏற்படும் அதிர்ச்சி, குற்ற உணர்வு, கோபம் மற்றும் தற்கொலை எண்ணங்களை ஆலோசகர்கள் கையாள்வார்கள்.

​”இது உங்களின் தவறு அல்ல” என்ற நேர்மறை எண்ணத்தை விதைப்பார்கள்.

​மனச்சோர்வு (Depression) இருந்தால் அதற்கேற்ப மனநல மருத்துவர்களிடம் பரிந்துரைப்பார்கள்.

Bismi

வாழ்க்கைமுறை மாற்றங்கள் (Lifestyle Guidance)

​ஆரோக்கியமாக வாழச் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்கள்,

​சத்தான உணவு உணவு என்பது மிக அவசியம்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கப் புரதச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும்

புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.

மற்றவர்களுக்குத் தொற்று பரவாமல் இருக்கவும், மீண்டும் மீண்டும் தொற்று ஏற்படாமல் இருக்கவும் பாதுகாப்பு முறைகளை (Condoms) பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது,

சிகிச்சை முறைகளைத் தொடர்ந்து மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை வாழ்நாள் முழுவதும் தடையின்றி எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கினார்கள். மாத்திரைகளை ஒருநாள் தவறவிட்டால் கூட வைரஸ் எதிர்ப்புத் திறனைப் பெற்றுவிடும் என்பதை மென்மையாக எடுத்துரைத்தார்கள்,

​சமூகப் பிணைப்பு (Social Support)

​குடும்பத்தினரிடம் இந்தத் தகவலை எவ்வாறு சொல்வது,

​ஒரே மாதிரியான பாதிப்பு உள்ளவர்களின் ஆதரவு குழுக்களுடன் (Support Groups) இணைந்து செயல்படுவது, இது அவர்களுக்கு “நாம் தனி ஆள் இல்லை” என்ற தைரியத்தைத் தரும் என்று அவர்களின் மனவலிமையை அதிகரிக்க செய்தார்கள், முக்கியமாக எச்.ஐ.வி பாதிப்பு உள்ளவர்களைத் தொடுவதாலோ, சேர்ந்து உண்பதாலோ அல்லது தும்மல், இருமல் மூலமாகவோ இந்த நோய் பரவாது என்பதைச் சமூகத்திற்கும் நோயாளிக்கும் ஆலோசகர்கள் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பதையும் அதேபோன்று இந்த வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது, விழிப்புணர்வு நிகழ்ச்சி முடிவில் வருகை தந்த மகளிர் அனைவருக்கும் வாகை தமிழ் தாய் டிரஸ்ட் சார்பில் நிறுவனர் தலைவர் பிரபுராஜ் அவர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்கள் மற்றும் ரூபாய் 200 நன்கொடையாக வழங்கினார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்