முனைவர் பா.ஜான் ராஜ்குமார் ஆன்மீகம் சமூக நலன் மற்றும் பன்முக சேவையில் 37 ஆண்டுகள் சாதனை பாராட்டு விழா
முனைவர் பா.ஜான் ராஜ்குமார் ஆன்மீகம் சமூக நலன் மற்றும் பன்முக சேவையில் 37 ஆண்டுகள் சாதனை பாராட்டு விழா

திருச்சியில் மார்ச் 6ஆம் தேதி ஜே.கே.சி நிறுவனர் ஐசிஎப் பேராயர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் அவர்களின் ஆன்மீகம், சமூக நலன் மற்றும் பன்முக சேவையில் 37 ஆண்டுகள் தொடர்ந்து சாதனை செய்து வருகிறார் அதனை முன்னிட்டு பாராட்டு விழா நடைபெற்றது,


ஜே கே சி கௌரவத் தலைவர் பேராசிரியர் பி. ரவிசேகர் தலைமையில், மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி பி ரமேஷ் முன்னிலையில் ,பி எம் எஸ் பவுண்டேஷன் பேராசிரியர் சி அருள் வரவேற்புரை ஆற்றினார்,டாக்டர் கே எஸ் சுப்பையா பாண்டியன், டாக்டர் தமிழரசு சுப்பையா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முனைவர் பா ஜான் ராஜ் குமார் அவர்களின் மகத்தான சேவை குறித்து சிறப்புரையாற்றினர்கள் ,


ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ஸ்டீல் என்.எம். சலாவுதீன், உதவி ஆய்வாளர் பணி ஓய்வு ஆர் முரளிதரன், பேராசிரியர் எம் சந்திரசேகரன், அமைச்சர் உலகத்தமிழ் திருக்குறள் பேரவை பேராசிரியர் சையத் ஜாஹீர் ஹாசன் ஜமால் முகமது கல்லூரி. பேராயர் எ.ஆபிரகாம் தாமஸ் எப் சி எ தலைமை போதகர். திருச்சி ஏர்போர்ட் பேராயர் எஸ் ஜேம்ஸ் ஈஸ்டர் ராஜ், இம்மானுவேல் தேவாலயம் திருச்சி. பேராயர் எட்மண்ட் வில்லியம்ஸ், ஆடிட்டர் எம். ரிச்சர்டு, ஆல்பர்ட், எ.எஸ். பாஸ்கர், டாக்டர் பி மதிகுமார் சக்தி மருத்துவமனை, மனிதநேயம் ஆரோக்கியசாமி உதவி ஆய்வாளர் பணி ஓய்வு, ஆசிரியர் கே. மாரிமுத்து தமிழ் அறிஞர் திருச்சி. ஆர் தங்கையா மேனாள் விஜிபி உப தலைவர் திருச்சி. சோழன் நீயூஸ் ஆசிரியர் வேல்முருகன், டி.விக்னேஷ் பி.ஆர். ஒ, ஆசிரியர் எம். அலெக்ஸாண்டர், பாஸ்டர் எ.ராஜன் மாநில செயலாளர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்,

முனைவர் ப.ஜான்ராஜ் குமார் ஐசிஎப் பேராயம். ஜே. கே சி நிறுவனர் வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகள் பற்றியும் சமூக சேவையின் சிந்தனைகள் குறித்தும் நினைவு கூர்ந்து பேசினார்,
திருமதி சகுந்தலா சந்தானகிருஷ்ணன் நன்றி உரையாற்றினார்.





Comments are closed.