ஊராட்சி ஆரம்பப் பள்ளியில், சமூகவிரோதிகள் மது குடித்து, கண்ணாடி பாட்டில்களை பள்ளியிலே உடைத்தது அராஜகம் – ஆசிரியருடன் பள்ளி மாணவர்கள் போராட்டம்
ஊராட்சி ஆரம்பப் பள்ளியில், சமூகவிரோதிகள் மது குடித்து, கண்ணாடி பாட்டில்களை பள்ளியிலே உடைத்தது அராஜகம் – ஆசிரியருடன் பள்ளி மாணவர்கள் போராட்டம் 
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம், வாணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆரம்பப் பள்ளியில் அத்து மீறி உள்ளே நுழைந்து சமூகவிரோதிகள் மது குடித்து அதன் கண்ணாடி பாட்டில்களை பள்ளியிலே உடைத்தது, தேசியக் கொடியேற்றும் கம்பத்தில், குப்பைத் துணியை ஏற்றி அராஜகம் செய்து வைத்துள்ளனர்.
பள்ளி திறந்தவுடன் பள்ளி ஆசிரியர் சமூகவிரோதிகள் செய்த அராஜகத்தை பார்த்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளியில் பையிலும் மாணவ, மாணவிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அப்பகுதி ஊர் பொதுமக்கள் இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என வாக்குறுதி அளித்தபின், பள்ளி ஆசிரியை குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றார்.
தொடர்ந்து பள்ளியில் இதேபோன்று சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் அப்போதெல்லாம் பள்ளி மாணவ, மாணவிகள் உதவியுடன் ஆசிரியர் அதனை முற்றிலும் அகற்றிய பிறகு, பள்ளி செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது,
இச்சம்பவம் குறித்து வாணாபுரம் காவல்துறையினர் இதுபோன்ற சமூக விரோத செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Comments are closed.