- Advertisement -

சிறிய பிசினஸ் நிறுவனங்களுக்கு சொத்தின் மீது கடன் வழங்குவதற்காக புதுக்கோட்டையில் ‘ஈசிஎல் ஃபைனான்ஸ்’-ன் புதிய கிளை திறப்பு!

- Advertisement -

எடெல்வைஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் (Edelweiss Financial Services Limited) நிறுவனத்தின் ஒரு அங்கமான ‘ஈசிஎல் ஃபைனான்ஸ் லிமிடெட்’, தமிழ்நாட்டில் தனது 7-வது கிளையை இன்று தஞ்சாவூரில் தொடங்கியிருக்கிறது.

சிறு மற்றும் குறு வணிகர்களுக்கு சொத்துக்களின் மீது கடன் வழங்குவதற்கான பிரத்யேக கிளையாக இது செயல்படும். இப்பிராந்தியத்தில் சிறு தொழில், வணிக நிறுவனங்களுக்கு முறைசார்ந்த நிதி நிறுவனங்களிடமிருந்து உரிய நேரத்தில் கடன் பெறுவதற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் அதை பூர்த்தி செய்வதே இந்த புதிய கிளை தொடங்கப்பட்டிருப்பதன் நோக்கமாகும்.

Vagai
Bismi

சிறிய தொழில்/வணிக நிறுவனங்களுக்கான LAP கடன் திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
· கடன் அளவு: இக்கிளையின் மூலம் சிறு தொழில் முனைவோர் ரூ. 50 லட்சம் வரை கடன் பெறலாம்.
· தகுதி: வீடு, வணிக வளாகம் அல்லது தொழிற்சாலைக் கட்டிடங்களை அடமானமாக வைத்து கடன் பெறலாம்.
· நன்மைகள்: எளிய ஆவண நடைமுறைகள், விரைவான மதிப்பீடு மற்றும் துரிதமான கடன் பட்டுவாடா மூலம் சிறு தொழில்களின் வளர்ச்சிக்கு இது உதவும்.

இந்நிகழ்வின்போது ஈசிஎல் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. அஜய் குரானா உரையாற்றுகையில், “இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs) மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. இருப்பினும், இவர்களுக்குத் தேவையான நேரத்தில் நம்பகமான கடன் கிடைப்பது சவாலாக உள்ளது. அதனை நிவர்த்தி செய்யவே எங்களின் இந்த நிதியுதவித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் எங்கள் சேவையை விரிவுபடுத்துவதன் மூலம், உள்ளூர் தொழில் முனைவோர் எளிதாகக் கடன் பெற்று தங்களின் தொழிலையும், வணிகத்தையும் மேலும் வளர்ப்பதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்,” என்றார்.

தமிழகத்தில் தனது இருப்பை வலுப்படுத்தவும், முக்கிய பிராந்திய சந்தைகளில் சிறு வணிகர்கள், தொழில் முனைவோர்களுக்கு உதவும் நோக்கத்துடனும் புதுக்கோட்டையில் இப்புதிய கிளையை ஈசிஎல் ஃபைனான்ஸ் திறந்துள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்