தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்!
இந்திய நாட்டின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தாய் நேசம் அறக்கட்டளை சார்பில், திருச்சி சங்கிலியாண்டபுரம் காந்தி தெரு பகுதியில், மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகளுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவனது கடந்த 25 ஆண்டுகளாக அந்த பகுதியில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காலையில் கொடியேற்றம் நடைபெற்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்விற்கு சமூக செயற்பாட்டாளர் பாடகர் Dr. ஆர்ம்ஸ்ட்ராங் ராபி தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தொழில் அதிபரும் பணாணா லீப் உரிமையாளரும் சமூக சேவகருமான R. மனோகர், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆர். கோவிந்தராஜ், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் B.முகமது ஷபி, தைலா சில்க் சென்டர் உரிமையாளர் M. மனோஜ் குமார், எஸ். ஆர். நிறுவனர் டிரஸ்ட் நிறுவனர் S. ராஜசேகரன், எவரஸ்ட் ஹீரோ கிராண்ட் மாஸ்டர் Dr.டிராகன் ஜெட்லி, தேசிய மாநில விருதுகள் பெற்ற நடிகரும் இயக்குனரும் மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.



இந்நிகழ்வு க்கான ஏற்பாடுகளை சமூக செயற்பாட்டாளர் உலக சாதனையாளர் ஆர்ம்ஸ்ட்ராங் ராபி மற்றும் தாய் நேசம் அறக்கட்டளையின் தலைவர் ஹப்சி சத்யாராக்கினி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் சுதாசரேஷ் மார்க் கிரெடிட் பட்டுராஜ் சர்வேஷ் அபிஷா ஜெனி செல்வராஜ் ஆண்டனி உள்ளிட்டோர் செய்திருந்தனர். விழாவில் அப்பகுதி பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.








Comments are closed.