- Advertisement -

100 நாட்கள் வேலை திட்டத்தில் பணி செய்யும் மகளிர்களுக்கு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு

- Advertisement -

100 நாட்கள் வேலை திட்டத்தில் பணி செய்யும் மகளிர்களுக்கு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு

Bismi

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் கிராம பகுதிகளில் கடந்த 08.01.2026 அன்று காவிரி மகளிர் கல்லூரி சமூகப் பணித்துறை மற்றும் சாக்சீடு தொண்டு நிறுவனம் இணைந்து நுகர்வோர் பாதுகாப்பு குடிமக்கள் நலச்சங்கம் சார்பாக அந்தநல்லூர் கிராமத்தில் 100 நாட்கள் வேலை திட்டத்தில் பணி செய்யும் மகளிர்களுக்கு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சமூக பணித்துறை தலைவர் மெட்டில் டா அவர்கள் தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நலச் சங்கத் தலைவரும் , சாலை பாதுகாப்பு குழு உறுப்பினருமான கோவிந்தராஜ் மகளிருக்கான அரசு திட்டங்கள் ,சுற்றுச்சூழல் பாதுகாப்பு ,மரம் நடுதல் அவசியம், நுகர்வோர்கள் கடமைகள், சாலை பாதுகாப்பில் கவனம் செலுத்தி காவல்துறையின் அறிவுரைகளை பின்பற்றி விபத்து மற்றும் மரணம் ஏற்படாத வகையில் காவல்துறையின் அறிவுரைகளை பின்பற்றி விபத்தில் லா திருச்சி மாவட்டமாக மாற்ற உறுதி ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஃபெட்காட் நுகர்வோர் பாதுகாப்பு நிறுவனத்தின் ,திருச்சி மாவட்ட செயலாளர் டாக்டர் கார்த்திக் ,பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்தும் இவற்றிலிருந்து பாதுகாக்க நாம் பின்பற்ற வேண்டிய கடமைகள் ,சுற்றுச்சூழல் பாது காப்பு குறித்து பேசினார் .திருச்சி “சாக்சீடு” சமூக பணியாளர் சசி அவர்கள் ,சாக்சீடு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். நிகழ்ச்சியை சமூகப் பணி மாணவி சத்யா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் சுமார் 60 க்கும் மேற்பட்ட மகளிர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்