77-வது குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு- மத்திய அரசு ஒப்புதல்

77-வது குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு- மத்திய அரசு ஒப்புதல்

Bismi

நாட்டின் 77-வது குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி இடம்பெற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா நடைபெறுகிறது. விழாவில் முப்படைகள் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு இடம்பெறுவது வழக்கம்.இந்த அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகள் மற்றும் துணை ராணுவ அலங்கார ஊர்திகள் பங்குபெறும். இந்தாண்டு அணி வகுப்புக்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்க உள்ளது. இம்முறை 10க்கும் மேற்பட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற உள்ளன.கடந்த ஆண்டு தமிழ்நாட்டின் அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காதது சர்ச்சையான நிலையில் இந்த ஆண்டு அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2026ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் தமிழக அரசின் அலங்கார வாகனம் இடம் பெற மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்து இருக்கிறது. பசுமை மின்சக்தி என்ற தலைப்பில் அலங்கார வாகனம் இடம்பெறும் என்று உள்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்