பெயர்,விலாசம் தெரியாத, உரிமை கோரப்படாத, அடையாளம் காணப்படாத ஆதரவற்ற பிணங்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு சிறந்த சமூக சேவகர்-2025 விருது!

பெயர்,விலாசம் தெரியாத, உரிமை கோரப்படாத, அடையாளம் காணப்படாத ஆதரவற்ற பிணங்களை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு சிறந்த சமூக சேவகர்-2025 விருது!

Bismi

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனம் சார்பில் பெயர் விலாசம் தெரியாத, உரிமை கோரப்படாத, அடையாளம் காணப்படாத ஆதரவற்ற உரிமை கோரப்படாத பிணங்களை உரிய முறையில் கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்யும் சமூக செயற்பாட்டாளருக்கு சிறந்த சமூக சேவகர்-2025 விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.மேனாள் திருச்சி மாநகராட்சி சுகாதார குழுத் தலைவர் தமிழரசி சுப்பையா,மருத்துவர் விஜய் கார்த்திக் முன்னிலையில், அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆராய்ச்சி கவுன்சில் நிறுவனத் தலைவர் கே.எஸ். சுப்பையா பாண்டியன், உரிமை கோரப்படாத ஆதரவற்ற நபர்களின் மரணம் கவனிக்கப்படாத நிலையில் பெயர், விலாசம், அடையாளம் காணப்படாத ஆன்மாக்கள் தங்கள் இறுதிப் பயணத்தில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் கண்ணியத்துடன் நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மனிதநேயப் பணியினைப் பணியினை பாராட்டி சிறந்த சமூக சேவகர்-2025 விருதினை வழங்கினார்.

விருது பெற்ற ஆதரவற்ற உரிமை கோரப்படாத அனாதைப் பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், ஆதரவற்ற அனாதை பிணம் என்பது உற்றார், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாரும் இல்லாத, ஆதரவற்ற நிலையில் இறக்கும் நபரின் உடலைக் குறிக்கிறது. இத்தகைய உடல்களை, சமூக சேவை செய்யும் தனிநபர்கள், குழுக்கள் காவல் துறையினருடன் இணைந்து மனிதநேயத்தின் அடிப்படையில் இறுதிச் சடங்குகளைச் செய்து அடக்கம் செய்கின்றோம். அனாதை பிணங்களில் மனநலம் பாதித்தவர்கள், குடும்பத்தால் கைவிடப்பட்டவர்கள், வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியவர்கள், விபத்தில், இயற்கைப் பேரழிவுகளில் சிக்கியவர்கள் போன்றோர் அனாதைகளாக இறக்கும் நிலை ஏற்படுகிறது.பெயர் , விலாசம், அடையாளம் தெரியாத அல்லது உறவினர்கள் இல்லாத உடல்களை, அரசு மருத்துவமனைகள் அல்லது காவல் துறையினர் கையாளுகின்றனர். பெயர், விலாசம், அடையாளம் தெரியாத உடல்களின் முகங்களுக்குப் பின்னால் உள்ள மௌன அழுகையை வார்த்தையால் கூறமுடியாது. காக்கப்பட வேண்டியவர்களால் கைவிடப்பட்டு,தங்கள் அன்புக்குரியவர்களை விட்டு பிரிந்து தனித்து யாசகம் கேட்டு பொது இடங்களில் உண்டு, உறங்கித் தனிமையில் அனுபவிக்கும் உணர்ச்சிகரமான சவால்கள் மனித புரிதலுக்கும் எல்லைக்கும் அப்பாற்பட்டது. பெயர்,விலாசம் தெரியாதவர்கள் இறந்து விட்டால் சரகக் காவல்துறையினர் அடையாளம் தெரியாத நபர்களை கண்டறிய உடல்களின் பதிவுகளை பராமரிக்கின்றனர். அவர்களை கண்டறிய வலைத்தளங்களிலும் செய்தித்தாள்களிலும் இறந்த நபர் படங்கள், அங்க அடையாளங்கள், உடலில் உள்ள தழும்புகள் , பச்சை குத்தல்கள் மற்றும் உடைகள், உயரம், எடை, தோல் நிறம் மற்றும் பிற உடல் பண்புகள் இடம் பெறுகின்றன. இருப்பினும், குறித்த காலங்களில் உடல்களை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் சரக காவல்துறையினர் முன்னிலையில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதை உடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்கின்றோம் என்றார். திருச்சி ஜே.கே.சி. அறக்கட்டளை மற்றும் ஐ.சி.எப். பேராயம் முனைவர் ஜான் ராஜ்குமார், ஐ.சி.எப். பேராயம் மாநில பொதுச் செயலாளர் பேராயர் ஆபிரகாம் தாமஸ், கௌரவத் தலைவர் பேராசிரியர் ரவிசேகர், ஐ.சி.எப். பேராயம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முனைவர் அருள், போதகர் ஜான் டோமினிக், அனைத்திந்திய மாற்று முறை மருத்துவ அகாடமி மாநிலச் செயலர் இயற்கை மருத்துவம் மற்றும் அக்குபஞ்சர் மருத்துவர் மகேஷ் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்