திருச்சியில் திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு!
திருச்சியில் திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு!
எனது சொத்திற்குள் அத்துமீறி நுழைந்து, சொத்தினை சேதப்படுத்தி, எனது நிலத்தை அபகரித்து, பணம் கேட்டு, கொலை மிரட்டல் விடுக்கும் திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு .

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் இர்பான் என்பவர் திருச்சி- மதுரை பைபாஸ் பகுதியில் அன்பு பாராமெடிக்கல் கல்லூரி என்கிற பெயரில் கல்லூரி ஒன்றினை நடத்தி வருகிறார். இந்நிலையில் திருச்சி ஓலையூர் பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு சொத்து ஏக்கர் 1.22 சென்ட் அளவு கொண்ட நிலத்தினை வாங்கி உள்ளார். மேலும் அதே பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் சொத்தின் ஒரு பகுதிக்குள் சுமார் 20-க்கும் மேற்பட்ட எனது அடியாட்களினை வைத்துக்கொண்டு மது அருந்துவது, சொத்திற்குள் அத்துமீறி உள்ளே வந்து தொல்லை ஏற்படுத்துவது போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் தினசரி ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதுக்குறித்து அந்த நபர்களை அணுகி இதுபோன்ற அத்துமீறுதலை தவிர்க்ககோரியும், சொத்திலிருந்து இனிமேற்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்றும் கூறினேன். மேலும் அனைவரும் வெளியேறக்கூறியும் தெரிவித்தேன்.
ஆனால் அதற்கு மேற்சொன்ன நபர்கள் வெறுமனே “அண்ணனிடம் சென்று பேசுங்கள்” என்று திருச்சி காஜாமலை பகுதியை சேர்ந்த திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் என்பவரை கூறினார். உடனே நானும் எனது, தந்தையும் மேற்படி காஜாமலை விஜய் என்பவரது அலுவலகத்திற்கு சென்று மேற்படி அவரது ஆட்களை வெளியேற சொல்லியும், அவர்களது பொருட்கள் மற்றும் தளவாட சாமான்களை அப்புறப்படுத்தவும் கூறினோம். ஆனால் அவரோ இடத்தில் இதுவரை அவர் அபகரிப்பு செய்த பகுதியினை அவரே எடுத்துக்கொள்வதகவும், மேலும் இனிமேற்கொண்டு தொந்தரவு செய்யக்கூடாது எனில் அதற்கு 30,00,000 லட்சம் தர வேண்டும் என கூறி அச்சுறுத்தல் செய்து வருகிறார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்தை அணுகி அதன் தீர்ப்பின்படி எனக்கு சொந்தமான இடத்தை மீட்டு தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்த உத்தரவை மதிக்காமல் காவல்துறையினர் செயல்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டலை விடுத்து வருகிறார்கள்.உயிருக்கு ஆபத்தான நிலையில் நான் எனது குடும்பம் வசித்து வருகிறோம். ஆகையால் உடனடியாக திமுக கவுன்சிலர் காஜாமலை விஜயின் மீது உரிய நடவடிக்கை எடுத்து என்னுடைய சொத்தை மீட்டு தர வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் இடம் புகார் மனு அளித்துள்ளேன். மேலும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக உள்ளேன் என்றார்.


Comments are closed.