துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனை சிம்ரன்பிரீத் கவுர்
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனை சிம்ரன்பிரீத் கவுர்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கவுர் (25 மீ பிஸ்டல்) தங்கம் பதக்கம் வென்றார்.கத்தார் தலைநகர் தோகாவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச் சுற்று நடக்கிறது. பெண்களுக்கான 25 மீ, பிஸ்டல் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஈஷா சிங் (585.23 புள்ளி) சிம்ரன்பிரீத் கவுர் பிரார் (584.25) முறையே 4, 5வது இடம் பிடித்து இறுதிசுற்றுக்குள் நுழைந்தனர்.
அடுத்து நடந்த இறுதிசுற்றில் அசத்திய சிம்ரன்பிரீத் கவுர் (21 வயது), 41 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். ஈஷா சிங் 15 புள்ளிகளுடன் 7வது இடம் பிடித்தார். ஐஸ்வரி ‘வெள்ளி’ ஆண்களுக்கான 50 மீ., ‘ரைபிள்-3 பொஷிசன்ஸ்’ பிரிவு தகுதிச் சுற்றில், இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (24 வயது), 595.42 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்தார். அடுத்து நடந்த இறுதிசுற்றில் அசத்திய ஐஸ்வரி தோமர், 413.3 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.


Comments are closed.