செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற டிசம்பர் 7 வரை அவகாசம் நீட்டிப்பு!

தெருவில் கைவிடப்படுவதை தவிர்க்க நடவடிக்கை -மாநகராட்சி அறிவிப்பு.

செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற டிசம்பர் 7 வரை அவகாசம் நீட்டிப்பு!

தெருவில் கைவிடப்படுவதை தவிர்க்க நடவடிக்கை -மாநகராட்சி அறிவிப்பு.

Bismi

 சென்னை மாநக​ராட்​சி​யில் இது​வரை 65,422 செல்லப் பிராணிகளின் விவரங்​கள் பதிவு செய்​யப்​பட்​டு, 24,477-க்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் பெறு​வதற்கு நவம்பர் 23 வரை காலக்​கெடு நிர்​ண​யிக்​கப்​பட்​டிருந்​தது.

செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும், இந்த தடுப்பூசி செலுத்தப்பட்ட நாள் முதல் ஓராண்டு காலத்திற்கு மட்டும் உரிமம் செல்லத்தக்கது என்பதை உறுதிப்படுத்தி மீண்டும் உரிமம் புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்யவும், செல்லப்பிராணிகள் கைவிடப்படுவதை தடுப்பதற்காகவும் செல்லப்பிராணிகளுக்கு மைக்ரோ சிப் செலுத்தி உரிமம் பெறுவது பெருநகர சென்னை மாநகராட்சியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மைக்ரோ சிப்பில் செல்லப்பிராணிகளின் உரிமையாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தரவுகள் பதிவு செய்யப்படும்.இந்​நிலை​யில், செல்​லப் பிராணி​களின் உரிமை​யாளர்​கள் கோரிக்கை அடிப்​படை​யில் இந்த காலக்​கெடு டிசம்பர் 7 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. திருவிக நகர், புளியந்​தோப்​பு, லாயிட்ஸ் காலனி, நுங்​கம்​பாக்​கம், கண்​ணம்​மாப்​பேட்​டை, மீனம்​பாக்​கம் ஆகிய 6 செல்​லப் பிராணி​கள் சிகிச்சை மையங்​களி​லும், சோழிங்​கநல்​லூர் நாய் இனக்​கட்​டுப்​பாட்டு மையத்​தி​லும் வாரத்​தின் அனைத்து நாட்​களி​லும் (ஞா​யிறு உட்​பட) காலை 8 முதல் பிற்​பகல் 3 மணி வரை உரிமம் பெறும் சேவையை பெறலாம் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்