- Advertisement -

இந்தியன் பிக்கிள்பால் லீக் அணிகள் சென்னையில் அறிமுகம்.

- Advertisement -

இந்தியன் பிக்கிள்பால் லீக் அணிகள் சென்னையில் அறிமுகம்.

இந்தியன் பிக்கிள் பால் லீக் (Indian Pickleball league) தனது தொடக்க சீசனுக்கான முதல் ஐந்து உரிமையாளர்களை வெளியிட்டுள்ளது.

Bismi

 இந்​திய பிக்​கிள்​பால் சங்​கத்​தின் ஆதர​வுடன் டெல்​லி​யில் உள்ள கே.டி.ஜாதவ் உள்​ விளை​யாட்டு அரங்​கில் வரும் டிசம்​பர் 1 முதல் 7 வரை இந்​தி​யன் பிக்​கிள்​பால் லீக் (ஐபிபிஎல்) போட்டி நடை​பெற உள்​ளது.

Vagai

இந்த தொடரில் கலந்து கொள்​ளும் அணி​களின் அறி​முக நிகழ்ச்சி நேற்று சென்னை கிண்​டி​யில் நடை​பெற்​றது.ஒவ்வொரு நகரமும் இப்போது ஒரு புதிய போட்டி அடையாளத்துடன் லீக்கில் நுழைகிறது. இதில் மும்​பை, பெங்​களூரு, சென்​னை, ஹைத​ரா​பாத், குர்​கான் ஆகிய நகரங்​களை மைய​மாக கொண்ட மும்பை ஸ்மாஷர்​ஸ், பெங்​களூரு பிளாஸ்​டர்​ஸ், சென்னை சூப்​பர் வாரியர்​ஸ், ஹைத​ரா​பாத் ராயல்​ஸ், குர்​கான் கேப்​பிடல் வாரியர்ஸ் ஆகிய 5 அணி​கள் அறி​முகம் செய்​யப்​பட்​டன.இந்​தி​யன் பிக்​கிள்​பால் லீக்​கில் மொத்​தம் 6 அணி​கள் கலந்து கொள்ள உள்​ளன. மீதம் உள்ள ஒரு அணி பின்​னர் அறிவிக்​கப்​படும் என போட்டி அமைப்​பாளர்​கள் தெரி​வித்​தனர். இந்த நிகழ்வில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் பிரபல நடிகைகள் ஸ்ரீலீலா மற்றும் காயது லோஹர் ஆகியோரும் கலந்துக் கொண்டனர். இந்தியாவின் முன்னணி பிக்கிள் பால் லீக் திறமையாளர்களான மிஹிகா யாதவ் மற்றும் அமன் படேல் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். இது விளையாட்டின் வளர்ந்து வரும் கலாச்சார கவர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்