ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் உள்ளதா?
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு!
ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் உள்ளதா?

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு!
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, நேற்று முன்தினம் மேற்கு வங்க மாநில ஆளுநர் ஆனந்தா போஸ், பாஜக குற்றவாளிகளுக்கு ராஜ் பவனில் அடைக்கலம் கொடுத்துள்ளார். அவர்களுடன் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகள் உள்ளன என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைக்கப்பட்டது .இது மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆளுநர் மாளிகையில் மிகப்பெரிய அளவில்
சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மதியம் அங்கு சோதனை நடத்தப்படுகிறது. இதற்காக வடக்கு பெங்கால் சென்றிருந்த ஆளுநர்,தனது பயணத்தை இடையில் முடித்துக் கொண்டு ஆளுநர் மாளிகை திரும்புகிறார். ஆளுநர் மாளிகை முன்பு கொல்கத்தா போலீசார்
குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மத்திய பாதுகாப்புப்படை வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். போலீசார் மற்றும் வீரர்கள் ஒன்றிணைந்து ஆளுநர் ஆனந்தா போஸ் தலைமையில் வெடிகுண்டுகள் மற்றும் வெடிப்பொருட்கள் உள்ளதா? என ஆளுநர் மாளிகை முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர்.


Comments are closed.