முன்னாள் “அரசு வழக்கறிஞர்” V. ஜெயப்பிரகாஷ் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய அதிமுக நிர்வாகிகள்!
முன்னாள் “அரசு வழக்கறிஞர்” V. ஜெயப்பிரகாஷ் திருவுருவப்படத்திற்கு, மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய அதிமுக நிர்வாகிகள்!
திருநெல்வேலி,நவம்பர் 15:-

திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், மாவட்ட செயலாளர்
“தச்சை” என். கணேச ராஜா தலைமையில், அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவின் முன்னாள் நிர்வாகி, திருநெல்வேலி மாவட்ட, “முன்னாள் அரசு வழக்கறிஞர்” V. ஜெயப்பிரகாஷ், திருவுருவப்படத்திற்கு, அவருடைய “நினைவு” தினமான நேற்று முன் தினம் (நவம்பர்.15) காலையில், அதிமுக நிர்வாகிகள் “மலர் மாலை” அணிவித்து, மரியாதை செலுத்தினர். இந்த நிகழச்சியில், அமைப்பு செயலாளர் “சுதா” K. பரமசிவம், கொள்கைபரப்பு துணை செயலாளர் “பாப்புலர்” V முத்தையா, அனைத்துலக MGR மன்ற துணை செயலாளர் “கல்லூர்” E.வேலாயுதம், நிர்வாகி வீரபெருமாள் நயினார், சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் A. மகபூப்ஜான், அவைத்தலைவர் “பரணி” A. சங்கரலிங்கம், முன்னாள் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசன், முன்னாள் சேரனமகாதேவி சட்டமன்ற உறுப்பினர் R.P ஆதித்தன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் V.T திருமலையப்பன், மருத்துவர்கள் பிரிவு நிர்வாகி டாக்டர். சார்லஸ் பிரேம் குமார் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.


Comments are closed.