- Advertisement -

வள்ளியூரில், தெருநாய் கடித்ததில், ரேபிஸ் நோயினால், பரிதாபமாக உயிரிழந்த, தினக்கூலித தொழிலாளி! திருநெல்வேலி,

- Advertisement -

வள்ளியூரில், தெருநாய் கடித்ததில், ரேபிஸ் நோயினால், பரிதாபமாக உயிரிழந்த, தினக்கூலித தொழிலாளி! திருநெல்வேலி,

 

திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள “சிதம்பராபுரம்” பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (வயது.30). தினக்கூலி தொழிலாளியான இவர், சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற இடத்தில், எங்கிருந்தோ பாய்ந்து வந்த தெரு நாய், இவரை கடித்தது. இதை ஐயப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினர், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

Vagai
Bismi

இந்நிலையில், வழக்கமாக வேலைக்கு சென்ற ஐயப்பனின் உடல்நிலை, திடீரென மோசமடைந்தது. இதனைத் தொடர்ந்து ஐயப்பனை, அவருடைய குடும்பத்தினர், நாகர் கோவில் அருகே, “ஆசாரிப்பள்ளம்” என்னும் இடத்தில் அமைந்துள்ள, நாகர்கோவில் “அரசு” மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு செய்யப்பட்ட

பரிசோதனையில், ஐயப்பனுக்கு “ரேபிஸ்” நோய் “பாதிப்பு” இருப்பது, உறுதியானது. இதனை தொடந்து ஐயப்பனுக்கு, “தீவிர சிகிச்சை” அளிக்கப்பட்ட போதிலும் கூட, சிகிச்சைக்குப் பலனின்றி, ஐயப்பன் இன்று (நவம்பர். 12) பரிதாபமாக, உயிரிழந்தார். இதற்கிடையே, ஐயப்பனுக்கு

சிகிச்சை அளித்த போது, 2 டாக்டர்களை ஐயப்பன் தாக்கியதாகவும், அவர்களுக்கு தற்போது, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, “மருத்துவத்துறை வட்டாரங்கள்” தெரிவித்தன.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்