திருக்கோவில்களில் பணி செய்யும் முடி திருத்தும் தொழிலாளர்கள் மற்றும் நாதஸ்வர இசை கலைஞர்களுக்கு அரசு பணியாளர்கள் ஆக்க வேண்டும் – தமிழ்நாடு முடி திருத்தும் அழகு கலை மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கம்
சென்னை
அரசின் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம்
திருக்கோவில்களில் பணி செய்யும் முடி திருத்தும் தொழிலாளர்கள் மற்றும் நாதஸ்வர இசை கலைஞர்களுக்கு அரசு பணியாளர்கள் ஆக்க வேண்டும் – தமிழ்நாடு முடி திருத்தும் அழகு கலை மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கம்

தமிழ்நாடு முடி திருத்தும் அழகு கலை மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கம் அரசின் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம்


தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை சார்பாக சென்னை சிவானந்தம் சாலை
சேப்பாக்கத்தில், அரசின் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது,
உண்ணா விரதப் போராட்டத்தை மாநிலத் துணைத் தலைவர் திருமயம்
எம்.சிங்காரம் துவக்கி வைத்தார்

வெங்கிருபழனி தலைமை உரையாற்றினார், மாநில பொதுச் செயலாளர் சுப்ரமணியன் சிறப்பு உரையாற்றினார்,
உண்ணாவிரதப் போராட்டத்தை ஒருங்கிணைத்து மாநில கொள்கை பரப்பு செயலாளர் திரவியம் சங்கர் சிறப்புரையாற்றினார் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், மருத்துவர் சங்கத்தின் அனைத்து நிர்வாகிகள் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்,
அதனைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை முடித்து வைப்பதற்கு அனைத்து மக்கள் கட்சி நிறுவனர் மற்றும் சமூக ஆர்வலர் ராஜேஸ்வரி பிரியா உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தென் சென்னை மாவட்ட தலைவர் எம் முரளி, மாவட்டச் செயலாளர் ஆர் முரளி, பொருளாளர் எஸ் பாஸ்கர் நன்றி கூறினார்கள்.

முடி திருத்தும் தொழிலாளர்கள் உடைய வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாவட்டம் தோறும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என உண்ணாவிரத போராட்டத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டது,
அரசின் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், அமைச்சர் பெருமக்கள், தமிழக முடி திருத்தும் தொழிலாளர்கள் அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் இந்நிகழ்ச்சி தென் சென்னை மாவட்டத்தில் சார்பாக நடைபெற்றது என்பதை உண்ணாவிரதப் போராட்டத்தின் சார்பாக தெரிவித்தனர்,

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வாரியாக வருகை தந்த மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவருக்கும் உண்ணாவிரத போராட்டம் சார்பாக நன்றி இணை தெரிவித்தனர்.
மருத்துவர் சமுதாயத்தின் பல ஆண்டு கோரிக்கைகள்
*எம் பி சி பிரிவில் 5% சதவீத உள் ஒதுக்கீடு வேண்டும் அல்லது சட்டநாதன் மண்டல் கமிஷன் கூறியது போல மக்கள் தொகை கணக்கெடுப்பு விகிதாச்சாரப்படி இரண்டு பேர் சென்று சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
*மற்ற மாநிலங்களில் உள்ளது போல மருத்துவ சமுதாயத்தில் உட்பிரிவுகளுக்கும் சேர்த்து பிசிஆர் சட்டம் போல் சட்ட பாதுகாப்பு வேண்டும்
*முடி திருத்தும் தொழில் செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விலை குறைப்பு விளம்பரம் கடைக்கு வெளியில் வைக்க தடை விதிக்க வேண்டும்
*முடி திருத்தும் தொழிலாளர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு போட்டியாக தொழில் முன்னேற அழகு கலை தொழில் கல்வி மற்றும் மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும்
*திருக்கோவில்களில் பணி செய்யும் முடி திருத்தும் தொழிலாளர்கள் மற்றும் நாதஸ்வர இசை கலைஞர்களுக்கு அரசு பணியாளர்கள் ஆக்க வேண்டும்
*அனைத்து மாநிலங்களில் உள்ளது போல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பங்களிப்பு மேலவை உறுப்பினர் அதாவது எம்எல்சி பதவியை மீண்டும் கொண்டு வந்து மருத்துவ சமுதாய மக்களுக்கு வழங்க வேண்டும்
*பாரம்பரிய மருத்துவர்கள் ஆன எங்களை மருத்துவர் சமூகத்தில் படித்த பெண்களுக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி முன்னுரிமை வழங்க வேண்டும்
என உண்ணாவிரத போராட்டத்தின் சார்பாக கோரிக்கைகள் வைத்திருந்தனர்.
கார்ப்பரேட் சலூன் கடைகளுக்கு எதிரான அரசின் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்ட இந்நிகழ்ச்சியில், மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள், வடசென்னை மாவட்ட நிர்வாகிகள், திருவள்ளுவர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.





Comments are closed.