- Advertisement -

திருச்சி நத்தர் ஷா தர்கா நிர்வாக அறங்காவலர் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ள வக்பு வாரியத்தில் மனு!

- Advertisement -

திருச்சி நத்தர் ஷா தர்காவில்
புதிய நிர்வாகிகள் வக்பு வாரியத்தால் அறிவிக்கப்பட்டதால் தற்போதைய நிர்வாக அறங்காவலர் அல்லா பக்ஸ், பொறுப்புகளை வக்பு ஆய்வாளரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேற வேண்டும் என ஜமாதார்கள் தரப்பில் திருச்சி பாலக்கரை வக்பு வாரிய அலுவலகத்தில் இன்று காலை மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தர்கா பொறுப்புகளை வக்பு ஆய்வாளரிடம் ஒப்படைப்பது தர்கா ஸ்கீம் டிகிரிக்கு மாற்றமாகவும், காலம்காலமான தர்கா நடைமுறைக்கு மாற்றமாகவும் உள்ளதால், இது குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதன் தீர்ப்பு வரும் வரை தற்போதைய நிர்வாக அறங்காவலர் அல்லா பக்ஸ் தர்காவின் அன்றாட பணிகளை தொய்வின்றி செய்வதற்கு வக்பு வாரியம் உறுதுணையாக இருக்க வேண்டும் என தர்கா வம்சாவளி பங்காளிகள் மற்றும் மஹல்லா வாசிகள் சார்பில் பாலக்கரை வக்பு அலுவலகத்தில் இன்று மாலை பதில் மனு தாக்கல் அளிக்கப்பட்டது.

Bismi

அதனை தொடர்ந்து தர்கா கலிபா சையத்கலந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,…

Vagai

திருச்சி நத்தர்ஷா தர்காவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுத்தாலும், தற்போதைய நிர்வாக அறங்காவலர் அல்லாபக்ஸ் நீதிமன்றம் சென்று தடை உத்தரவை பெற்றுள்ளார். மேலும் சட்டப்படி புதிய நிர்வாகிகள் வந்த பின்பு தான் பொறுப்புக்களை வழங்க வேண்டும் என கூறப்படுகிறது.
இதற்காக தற்போது நிர்வாக அறங்காவலர் அல்லாபக்ஸ் மேல் முறையீடு செய்துள்ளார். எனவே அந்த வழக்கு முடியும் வரை தற்போதைய அறங்காவலரே பணியைத் தொடர வேண்டும் என திருச்சி பாலக்கரையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரிய அலுவலகத்தில் கண்காணிப்பாளரிடம் நாங்கள் மனு கொடுத்துள்ளோம். முறைகேடு நடைபெறுவதாக காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் தெரிவிக்கின்றனர் என கூறினார்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்