- Advertisement -

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்! துணை மேயர், அதிகாரிகள் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுக்கள் பெற்றனர்!  

- Advertisement -

திருநெல்வேலி மாநகராட்சியில் நடைபெற்ற, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்! துணை மேயர், அதிகாரிகள் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து, மனுக்கள் பெற்றனர்!

 

Bismi

வாரந்தோறும் தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகளிலும் நடைபெற்று வரும், மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம், இன்று (செப்டம்பர்.23) காலையில், திருநெல்வேலி மாநகராட்சியிலும் நடைபெற்றது. இங்குள்ள மைய அலுவலகத்தில் உள்ள, கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்ற இந்த முகாமில், துணை மேயர் கே. ஆர். ராஜூ, மண்டல உதவி ஆணையர்கள் புரந்திர தாஸ், மகா லட்சுமி ஆகியோர் கலந்து கொணடு, மாநகர மககளிடமிருந்து நேரடியாக, கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். குடிநீர்த்தட்டுப்பாடு, பொதுக்கழிப்பிடம் சுத்தமின்மை, வடிகாலில் சாக்கடை நீர் தேங்கி நிற்றல், குடிநீர் இணைப்புக்குழாயில் பழுது, இணைப்புச்சாலை போடாதிருத்தல், பாதாளச்சாக்கடையுடன் குடிநீர் கலந்து வருதல் போன்ற பிரச்சனைக . .ள், மனுக்களில் குறிப்பிடப்பட்டிருந்தன. “பெறப்பட்ட மனுக்கள் மீது, உடனடியாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, குறைகள் நிவர்த்தி செய்யப்படும்!’- என்று, துணை மேயரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மனுதாரர்களிடம் உறுதி அளித்தனர். இந்த நிகழ்வில், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்கள் தங்கப்பாண்டியன், அலெக்சாண்டர், ரவி, சுகாதார அலுவலர் சாகுல் அமீது ஆகியோரும், பங்கேற்றிருந்தனர்.

 

Vagai

திருநெல்வேலி மாவட்டம் செய்தியாளர் மேலப்பாளையம் ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்