விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி மரணம்! காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!
விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி மரணம்! காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பழூர் புது பாலம் அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் சாலையை கிழக்கில் இருந்து மேற்க்காக கடக்கும் போது விபத்து ஏற்பட்டு தலை, இடது கை, இடது காலில் காயம் ஏற்பட்டு சாலையில் கிடந்தவரை
உயிர் காக்க ஆம்புலன்ஸ் மூலமாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி, புத்தூர், அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்நோயாளியாக சிகிச்சை பெற்றவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இறந்த நபர் குறித்து கொள்ளிடம் காவல் நிலைய காவலர்கள் விசாரிக்கையில், மேற்படி நபர் பகல் நேரங்களில் யாசகம் கேட்டு உண்டும், இரவு நேரங்களில் பாலத்தின் கீழ் உறங்குபவர் என்பது தெரிய வந்தது. இறந்த நபர் உடல் கூராய்வு செய்யப்பட்டது. உடற்கூராய்வு செய்யப்பட்ட உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் கொள்ளிடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சிவசங்கர் நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில், திருச்சி தென்னூர், குழுமிக் கரை மயானத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவசங்கர், காவலர் ராஜாங்கம் முன்னிலையில் காவலர்களுடன் இணைந்து இறந்த நபர் உடலுக்கு இறுதி சடங்கு செய்து யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.





Comments are closed.