கடியாபட்டியில் இந்திய தேசிய காங்கிரஸ் புதிய கட்டிடத்தை முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் திறந்து வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரிமளம் வடக்கு ஒன்றிய கடியாபட்டியில் காங்கிரஸ் கட்சி புதிய அலுவலக கட்டிடத்தை பாராளுமன்ற உறுப்பினர்ப. சிதம்பரம் எம் பி அலுவலகத்தை திறந்து வைத்தார் மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நான்கு லட்சத்து 50,000 ரூபாயில் கட்டி முடித்த உடற்பயிற்சி கூடத்தை பார்வையிட்டார் மேலும் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் குத்துவிளக்கேற்றினார்.


நிகழ்ச்சியில்

தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராமசுப்புராம் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அரிமளம் வடக்கு வட்டார தலைவரும் திருமயம் தொகுதி பொறுப்பாளர்
இராம. அர்ஜுனன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார் அப்போது தனது தகப்பனார் இராமநாதன் ஆசிரியர் அவர்களை நினைவு படுத்தி கண்ணீர் மல்க பேசினார் அதனைத் தொடர்ந்து முன்னாள் நிதி அமைச்சர் பேசுகையில் இன்று ஆசிரியர் தினம் இன் நன்னாளில் இராமநாதன் ஆசிரியர் கட்சி பணியாற்றிய காங்கிரஸ் கட்சியின் பணியினை மிக சிறப்பாக எடுத்துக் கூறினார் திருமயம் தீரர் சத்தியமூர்த்தி நூலக கட்டிடம் கட்டிடத்தினுடைய பர்சன்டேஜ் கணகக்கு 95% என கூறினார் இராமநாதன் ஆசிரியர் அவருடைய புதல்வன் வடக்கு வட்டாரத் தலைவர் அர்ச்சுனன் காங்கிரஸ் அலுவலக கட்டிடத்தை மிகச் சிறப்பாக நான்எதிர்பார்த்ததை விட கூடுதலாக கட்டிடத்தை கட்டி முடித்தார் என்றும் கட்டிடத்தை கட்டி முடித்த திருமயம் தொகுதி பொறுப்பாளர் மற்றும் வடக்கு வட்டாரத் தலைவர்

இராம. அர்ஜுனன் கட்டிய கட்டிடத்திற்கு மதிப்பீடு மார்க்கை 105% ஆக அறிவித்து பாராட்டி வாழ்த்துக்களை கூறினார் மேலும் திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைத்து காங்கிரஸ் கட்சியினரும் மகிழ்ச்சியடைந்தனர் நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி மாநில பொதுக்குழு உறுப்பினர் இப்ராஹிம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மழைக்கொழுந்து தெற்கு வட்டார தலைவர் எம் எம் கணேசன் திமுக ஒன்றிய செயலாளர் அழகு சிதம்பரம் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கே ஆர் இராமசாமி
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜீவானந்தம் மற்றும் கூட்டணி கட்சி சார்ந்த நிர்வாகிகள் மாவட்ட மாநில வட்டார நகர கிளை நிர்வாகிகள் நகர தலைவர்கள் திரளாக கலந்து கொண்டனர் கூட்ட முடிவில் கடியாபட்டி அதிமுகவை சேர்ந்த பிச்சை பிரபு அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் மத்திய நிதியமைச்சர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் கூட்டம் முடிவில் முன்னாள் வட்டாரத் தலைவர் பிச்சை குட்டி நன்றி கூறினார்





Comments are closed.