- Advertisement -

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் நெல்லை மாநகர காவல் ஆணையர் ஆகியோரால், தனித்தனியாக நடத்தப்பட்ட, மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டங்கள்!  

- Advertisement -

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் நெல்லை மாநகர காவல் ஆணையர் ஆகியோரால், தனித்தனியாக நடத்தப்பட்ட, மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டங்கள்!

 

திருநெல்வேலி மாவட்டம்

Vagai

தமிழகக் காவல்துறை தலைமை இயக்குனர் (D. G. P) உத்தரவுப்படி, “மக்கள் குறைதீர்க்கும்நாள்” கூட்டம், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையிலும், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில், நடைபெற்று வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன் தலைமையில், பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் பகுதியிலுள்ள, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று (செப்டம்பர். 3) கலையில், “மக்கள் குறைதீர்க்கும் நாள்” கூட்டம் நடைபெற்றது.

 

Bismi

இந்த நிகழ்ச்சியின் போது,

மாவட்ட மக்களிடம் இருந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மொத்தம் 28 மனுக்களை, நேரடியாக பெற்றுக்கொண்டார். “பெறப்பட்ட மனுக்கள் மீது, முறையாக விசாரணை நடத்தப்பட்டு, விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்!” என மனுதாரர்களிடம், மாவட்ட காவல் கண்காணிப்பளர், உறுதி அளித்தர். அதனைத் தொடர்ந்து, விசாரணையை விரைந்து முடிக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, அவர் உத்தரவிட்டார்.

 

இதுபோல, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே அமைந்துள்ள, நெல்லை “மாநகர காவல் ஆணையர்” அலுவலகத்திலும், இன்று ( செப்டம்பர். 3) “மக்கள் குறைதீர்க்கும் நாள்” கூட்டம் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ் ஹாதிமணி, இந்த கூட்டத்தில் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இவ்வாறு மொத்தம் 11மனுக்கள், பெறப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் போது, மாநகர காவல், மண்டல துணை ஆணையர்கள் மேற்கு “முனைவர்” V.பிரசன்ன குமார், கிழக்கு V. வினோத் சாந்தாராம் ஆகியோர், உடனிருந்தனர்.

 

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்