ஜனாதிபதி திரௌபதி முர்மு ஶ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம்!

ஜனாதிபதி திரௌபதி முர்மு ஶ்ரீரங்கம் கோவிலில் சுவாமி தரிசனம்!

 

Bismi

தமிழகத்தில் இரண்டு நாள் பயணமாக இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேற்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து சென்னையில் இருந்து விமான மூலம் இன்று காலை திருச்சி வருகை தந்தார். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் சென்ற குடியரசுத் தலைவர், மத்திய பல்கலைக்கழகத்தின் 10 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருச்சி திரும்பிய ஜனாதிபதி, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியும் வருகை தந்தார்.

குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, அரங்கநாத சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு பிற்பகல் 1 மணிக்கு பிறகு அனுமதி வழங்கப்படவில்லை. தரிசனத்துக்கு பிறகு ஜனாதிபதி முர்மு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்