- Advertisement -

பி.எஸ்.என்.எல். சுதந்திர தின சலுகை, இம்மாதம் (செப்டம்பர்) 15-ஆம் தேதிவரை நீட்டிப்பு! வாடிக்கையாளர்களின் ஆதரவைத் தொடர்ந்து, திருநெல்வேலி பி.எஸ்.என்.எல். அதிரடி அறிவிப்பு!

- Advertisement -

பி.எஸ்.என்.எல். சுதந்திர தின சலுகை, இம்மாதம் (செப்டம்பர்) 15-ஆம் தேதிவரை நீட்டிப்பு! வாடிக்கையாளர்களின் ஆதரவைத் தொடர்ந்து, திருநெல்வேலி பி.எஸ்.என்.எல். அதிரடி அறிவிப்பு!

 

 

திருநெல்வேலி,

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான, “பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்” (பி.எஸ்.என்.எல்) நிறுவனம், தனது சுதந்திர தின சிறப்பு சலுகைத் திட்டத்திற்கு, வாடிக்கையாளர்களிடையே கிடைத்த, மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்தச் சலுகையை இம்மாதம் (செப்டம்பர்) 15-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Vagai

பி.எஸ்.என்.எல். நிறுவனம் சென்ற மாதம் (ஆகஸ்ட்) “சுதந்திர தின சலுகையாக, ப்ரீடம் பிளான் FRC-1” என்னும் பெயரில், “சிறப்புத் திட்டம்” ஒன்றை அறிமுகம் செய்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 3 தென் மாவட்டங்களில், இந்தத் திட்டத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் விளைவாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 16 ஆஆயிரத்துக்கும் மேற்பட்ட, “புதிய” வாடிக்கையாளர்கள், பல்வேறு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்து, பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறியுள்ளனர்.

வாடிக்கையாளர்களின், தொடர் வேண்டுகோளை ஏற்றும், இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்தும், இந்த சிறப்புச் சலுகையானது, இம்மாதம் (செப்டம்பர்) 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக, திருநெல்வேலி பி.எஸ்.என்.எல் முதன்மை பொது மேலாளர் ராஜேஷ் குமார் வர்மா, இன்று (செபடம்பர். 3) மாலையில் வெளியிட்டுள்ள, பத்திரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளார். நீட்டிக்கப்பட்டுள்ள இந்த சலுகையின்படி,

Bismi

1 ரூபாய் செலுத்தி, புதிய 4ஜி சிம் கார்டை பெற்றுக் கொள்ளலாம்.

மற்ற நிறுவனங்களில் இருந்து, தங்களது பழைய எண்ணை மாற்றாமலேயே, பி.எஸ்.என்.எல். நெட் வொர்க்கிற்கு எளிதாக, மாறிக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் இணையும் வாடிக்கை யாளர்களுக்கு, முதல் 30 நாட்களுக்கு அனைத்து நெட் வொர்க் அழைப்புகளும், முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படும். தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 குறுஞ்செய்திகள் (SMS) இலவசமாக வழங்கப்படும்.

மேலும், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் 199 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில், 28 நாட்களுக்கு இலவச அழைப்புகள், தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ போன்ற சலுகைகள் மலிவான விலையில் வழங்கப்படும். இது போன்று, பல கவர்ச்சிகரமான ரீசார்ஜ் திட்டங்கள், குறைந்த விலையில் கிடைப்பதாக, அந்த அறிக்கையில் பொது மேலாளர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

” வாடிக்கையாளர்கள், இத்தகைய அரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின், அதிவேக 4 ஜி சேவையில் இணைந்து, பயன்பெற வேண்டும்!”பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சார்பாக, அதன் பொது மேலாளர் அன்புடன் கேட்டுக்கொண்டு உள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்